பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி லாந்திபிநிசீடனென்றும் பேர் பெற்ற பெருமானுக்கு அர்ச்சா வதாரத்தில் பரகால சீடனென்று பெயர்பெறுதல் பெருமையாம் என்பது வியாக்கியான சக்கரவர்த்தியின் கொள்கை. இன்னொரு திருப்பாசுரத்தில் எம்பெருமானின் காக்கும் தன்மையைப் பேசும் போக்கில் வேறொரு முக்கியமான கருத்தையும் குறிப்பிடுகின்றார். மண்நாடும், விண்நாடும், வானவரும், தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக் கொண்ட கண்ணாளன், கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தே எண்ணாத போதுஎல்லாம் இனிய ஆறே." (மண்நாடு - பூவுலகம்; விண்நாடு - உம்பர் உலகம்; வானவர் - தேவர்; தானவர் - அசுரர்; பெருவெள்ளம் - பிரளய வெள்ளம்; உய்ய - உய்வித்தருளிய, கண்ணாளன் - பரம தயாளன்; கழல்-திருவடிகளை; சூடி- சிரமேல் புனைந்து; மானிடம்-மனிதர்கள்) என்பது பாசுரம். 'பிரளய வெள்ளத்தினின்றும் ஆபத்து நேராதபடி உலகனைத்தையும் தன் திருவயிற்றினுள் அடக்கி வைத்துப் பாதுகாத்தருளின் எம்பெருமானே கண்ணமங்கையில் திருக்கோயில் கொண்டுள்ளான்; இந்த எம்பெருமானுடைய திருவடிகளைத் தலைமேற் புனைந்து அப்பெருமானையே இடைவிடாது சிந்தித்திருத்தல் நன்றியறிதலுடைய செயலாகும்; அப்படிச் சிந்திக்கமாட்டாத பாவிகளை நாம் நெஞ்சிலும் இட்டு எண்ணாதிருந்தால் அதுவே நமக்குப் பரமபோக்கியம்,' என்கின்றார் ஆழ்வார். இங்கு வியாக்கியான வாக்கியம், 'ஞானமும் வேண்டா; வைணவ சகவாசமும் வேண்டா, அவைணவர்களை நினையாதபோது இனிதென்கை.' எம்பெருமானையும் எம்பெருமானின் அடியார்களையும் சிந்திக்கையாகின்ற புருஷார்த்தத்தைக் காட்டிலும் பகவத் பாகவத விமுகர்களை(நோக்கற்றவர்களை) சிந்தியாதிருக்கப் பெறுகையே பரமபுருஷார்த்தமென்பது திருமங்கையாழ்வாருடைய திரு வுள்ளம். திருக்கோயிலை வலம் வருங்கால் பல அரிய 6. பெரி. திரு. 11.6:7.