பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண மங்கைக் கற்பகம 171 சிற்பங்களைக் காண்கின்றோம். இக்கலை வடிவங்களின் அருமை பெருமைகளை நமக்கு விளக்க வேண்டுமானால் ஒரு பாஸ்கரத்தொண்டைமான் நம்முடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்கின்றோம். அடுத்து, பத்தராவிப் பெருமாளுக்கு வடப்பக்கத்தில் தனிக்கோயில் கொண்டிருக்கின்றார் அபிஷேக வல்லித் தாயார். அங்குச் சென்று அவரையும் வணங்குகின்றோம். இச்சந்நிதியில் ஒர் அதிசயம். இங்கு ஒரு பெரிய தேன்கூடு கட்டப்பெற்றிருப் பதைக் காண்கின்றோம். இது எப்போது கட்டப் பெற்றது என்று கணிக்க முடியாத நிலை. இது கட்டப் பெற்றதற்கு ஒரு கதை மட்டிலும் வழங்கி வருகின்றது. கணமங்கை நகராளனைப் பிரிய விரும்பாத முனிபுங்கவர்கள் தேனியாகப் பிறக்க வரம் வாங்கிக் கொண்டார்களாம் பத்தராவிப் பெருமாளிடம். அப்பெரு மக்களே இங்கு எக்காலத்திலும் நாடோறும் கணமங்கைக் கற்பகத் தையும், அபிடேகவல்லித் தாயாரையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு இசையொலி எழுப்பிக்கொண்டு வாழ்கின்றனர். கணமங்கைப் பெருமான் அணிந்திருக்கும் திருத்துழாய் மாலைகளில், தேனுக்குக் குறைவில்லை. அந்தத் தேனையே உண்டு உண்டு திளைத்து, தேக்கெறிந்து, எந்நேரமும் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். இத்தேன் கூட்டிற்கு (இதில் வாழும் முனிபுங் கவர்கட்கு) நாடோறும் பூசை நடைபெறுகின்றது. ஆகவே, நாமும் இத்தேன் கூட்டை வழிபட்டுத் திரும்புகின்றோம். இந்நிலையில் திவ்வியகவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா ஒருத்தனை நீநெஞ்சே உணரில் - பெருத்தமுகில் வண்ணம்.அம் கைக்கண்கால் வனசம் திருவரங்கக் கண்ணமங்கை ஊரென்று காண்' (கருத்து - மனம்; கானா - கண்டறிய முடியாத ஒருத்தன் - ஒப்பற்றவன்; வண்ணம் - நிறம், வனசம் - செந்தாமரை மலர், வனசம், வநஜம் - நீரில் தோன்றுவது) என்பது பாசுரம். 'எம்பெருமானது உண்மை நிலையை உள்ளபடி அறிய விரும்பினால், அவனது திருமேனி நிறம் 7. நூற்.திருப். அந். 27