பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான்

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் 108 திவ்விய தேசங்களில் திருநாடும் திருப்பாற்கடலும் நீங்கலாக 106 திருத்தலங்கள் அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளியிருப்பவை. செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம் என்று முமூட்சுப்படி பேசும்.1

தமருந்தது எவ்வுருவம்
அவ்வுருவம் தானே?2

என்று பொய்கையாழ்வார் பேசுவது இந்த அர்ச்சை நிலை எம்பெருமானையே. இந்த நிலை எம்பெருமானே கண்ணாலே காணலாம்படி இருக்கும். இந்த நிலை எம்பெருமான்கள் நான்கு வகையினராகப் பிரித்துப் பேசப் பெறுவர். இவர்களுள் மனிதர்களால் பிரதிட்டை செய்யப் பெற்றுப் பூசிக்கப் பெறும் திருமேனிகள் 'மானுஷம்1; வியாசர் போன்ற மாமுனிவர்களால் பிரதிட்டை செய்து பூசிக்கப் பெற்றவை ஆர்ஷம’1'; நான்முகன் முதலிய தேவர்களால் பிரதிட்டை செய்து பூசிக்கப் பெற்றவை ’தைவம்'. இவ்வாறன்றி எம்பெருமான் ஸ்வயமாகவே ஆவிர்க்கப் பெற்றுப் பிறகு தேவர் முதலியோரால் பூசிக்கப் பெற்று வருபவை 'ஸ்வயம் வியக்தம்' எனப்பெறும்; நம் நாட்டில் உள்ள இவை எட்டு. இவை. திருஅரங்கம், திருவேங்கடம், ஸ்ரீ முஷ்ணம்3, வானமா மலை, புஷ்கரம்,' நைமிசாரண்யம், பதரிக்காச்சிரமம், சாளக்கிராமம் என்ற இடங்களிலுள்ளவை. திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகள் மானுஷம் ஒழிந்த மற்றையவை மூவகை அர்ச்சையினைச் சேர்ந்தவை; இவற்றுள் சில ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளில் சேரவில்லை; இங்ஙனம் விடுபட்டவை புராணத் ’திருத்தலங்கள்' என்றும், 'அபிமானத் திருத்தலங்கள்' என்றும் பேசப்பெறும்.

1. முமுட்சுப்படி- 109.

2. முதல் திருவந் - 44.

3,4. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெறவில்லை.சுப்பு-2