பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண மங்கைக் கற்பகம் 173 புகைகிளர் வேற்கைச் சனகன் மகளென்னப் பூத்தமணி வகைகிளர் செம்பொன் மவுலித் தசரதன் வாழ்மனைக்குத் தகைகிளர் செல்வ மருமகளெனைத் தவமென செய்தார் நகைகிளர் மாமுகக் கொம்பே கணமங்கை நாயகியே. (33) இதில் சனகன் 'நின்னை அருமை மகளாகவும் தசரதன் கிடைத்தற்கரிய மருகளாகவும பெறுவதற்கு என்ன மாதவம் செய்தனரோ?' என்று வியப்பெய்துகின்றார் கவிஞர். பாலாழி யோதிரு வைகுந்த மோமது பாய்கஞ்சமோ மாலாக மோசன கேசன் தசரதன் வாழ்மனையோ மேலான வுள்ள மிலாத்தமி யேன்மனம் வீற்றிருந்தாய் நாலா ரணத்தின் கொழுந்தே கணமங்கை நாயகியே. (41) பாற்கடல், வைகுந்தம், தாமரைமலர், திருமாலின் திருமார்பு, சனகனின் வீடு, தசரதனின் இல்லம் இவை எல்லாவற்றையும் விட மேலான உள்ளம் இல்லாத தம்மனத்தில் வீற்றிருப்பது என்னே என்று வியப்பெய்துகின்றார். இதில் பொன்மணி தாரு பரிதுமபி யான்பிறை பூவெண்சங்கும் மென்மது ரத்தெள் ளமுதும் பயோததி வீசியது தன்மக ளாம்உனக் கேசீ தனமென்று தானல்லவோ நன்மலர் மாளிகை வாழ்வாய் கணமங்கை நாயகியே (58) 'பொன், மணி, கற்பகத்தரு, பரி, வெண்சங்கு முதலியவை யாற்றையும் கடலன்னை வீசியது தன்மகளாகிய நினக்கு சீதனப் பொருள்களாகவன்றோ?' என்கின்றார்.