பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி பொன்னு புரம்,இடும் உன்பாத கீர்த்தி பொலிந்திலங்கும் தொன்னூல் எலாந்தெய்வ யாழொலி நங்கன் திருச்செவிக்குப் பன்னூல்கள் தாம்இருப் பாணிகண் டாய்மயிர்ப் பாதியைநேர் நன்னூல் பொருஞ்சிற றிடையாய் கணமங்கை நாயகியே (70) என்று திருமகளின் திருப்பாதச் சிறப்பைப் பேசுகின்றார். மேலான வைகுந்த வீட்டுக் கருளின் விளங்கும்ஒரு மாலாகும் மாலுக்கு மாலாக்கும் உன்குழல் மாலைதமிழ் நூலால் அனுதினம் நானுற் பதுபற்ப நுாலினத னாலானை வீக்கும் தனைத்தே கணமங்கை நாயகியே (86) வைகுந்தத்தில் எழுந்தருளியிருக்கும் மாலுக்கும் மயக்கத்தைத் தரும் உன் குழல் மாலையை என் தமிழ் நூலால் நூற்பன்' என்கின்றார். இங்ங்னம் கணமங்கை நாயகியின்மேல் எழுந்துள்ள பாசுரங்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் கும்பகோணத்தை நோக்கிப் பயணமாகின்றோம்.

k k sk