பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி திருச்சியில் தங்கியிருக்கும் நம் சிந்தையில் இந்த எண்ணங்கள் குமிழிட்டெழுந்த வண்ணம் திருவரங்கம் என்ற திருத்தலத்திற்குப் போகச் சித்தமாகின்றோம். இந்தத் திருக் கோயில் விழுப்புரம்-திருச்சி இருப்பூர்திப் பாதையில் திரு வரங்கம் நிலையத்தினின்றும் முக்கால் கிலோ மீட்டர் தொலைவி லுள்ளது. நிலையத்தினின்றும் எல்லாவித வாகன வசதிகளும் கிடைக்கும். திருவரங்கம் ஒரு பெரிய நகரமாதலின், சத்திரங்கள், ! தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், இராமாநுச கூடங்கள் முதலியவை இங்கு உள்ளன. திருத்தலப் பயணிகள் ஏதாவது ஒன்றில் தங்க ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். திருச்சியி லிருந்து திரு அரங்கத்திற்கு நகரப் பேருந்துகள் அடிக்கடிப் போய் வந்துகொண்டுள்ளன. திருச்சியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இத்திருத்தலத்திற்கு நகரப்பேருந்து மூலம் வந்து கொண்டிருக்கின்றோம். நம் மனத்தில் பல்வேறு கருத்துகள் எழுகின்றன. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையைப் பொருநைநதி-என மேவிய யாறு பலவோடத்- திரு மேனி செழித்த தமிழ்நாடு’ என்ற தமிழ் நாட்டின் வளத்தைக் காட்டும் பாரதியாரின் சொல்லோவியம் நம் மனத்தில் திரையிடுகின்றது. தமிழகத்தை வளப்பமுறச் செய்து அணி செய்யும் ஆறுகளுள் தலை சிறந்தது காவிரி. இந்த ஆற்றங்கரையில் இயற்கை வளத்தடன் அறிவு வளத்திற்கும் பேர் போன தலங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரி பாயும் இடம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு கருவூலமாக இருந்தது போல் அறிவு வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் பெரிய ஒரு கருவூலமாகத் திகழ்ந்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. தமிழ் நாட்டில் பக்தி இயக்கம் தோன்றிய காலத்திலும் அதற்குச் சற்றுப் பின்னரும் வைணவத்தின் வளர்ப்புப் பண்ணைகளாகத் திகழ்ந்த பெருந்தலங்கள் திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம், காஞ்சிபுரம் என்பவை யாகும். இவற்றுள் 'பெரிய கோயில்’ என வழங்கப் பெறும் திருவரங்கம் தனிப்பெறும் புகழிற்கு உரிய தலமாகும். 5. பாரதியார் கவிதைகள் - செந்தமிழ் நாடு - 3.