பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் 3 ஆற்றிடைக்குறையாகிய இந்த அரங்கம் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே பொருந்திச் சோலைகள் சூழ்ந்து விளங்குகின்றது. இதன் வளத்தை, “முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லை பாய முல்லைநிலத் தயிர்பால்நெய் மருதத்தோட மருதநிலக் கொழும்பாகு நெய்தல் தேங்க வருபுனல்கா விரிசூழ்ந்த வளம்" என்று வருணித்திடுவர் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். இந்த அரங்கநாதனைக் காவிரியும் அதன் கிளையாறாகிய கொள்ளிடமும் மாலையிட்டுச் செல்வதுபோல் அமைந்துள்ளன. 'திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி' என்று இவரை இந்நகரில் அரவணைப்பள்ளியில் அறிதுயில் கொண்டுள்ளவராகக் குலசேகரப்பெருமாள் காண்பர். பக்தி வளத்திற்குப் பேர்போன இத்தலம் பூலோக வைகுந்தம்’ என்று போற்றிப் புகழப் பெறுகின்றது. ஆழ்வார்கள் பாடிய திருப்பதிகளுள் இதுவே முதன்மையானதாக மதிக்கப் பெறுகின்றது. வட நாட்டினரும் தென்னாட்டினரும் இதனை இந்தியாவின் புனிதத் தலங்களுள் மிக்க புகழ்பெற்றதாகக் கருதுகின்றனர். 'தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதி" என்பது பெரியாழ்வாரின் திருவாக்கு. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த திருவரங்கம், பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை விளக்காய்.” 6. சீரங்கநாயகர் ஊசல்-29,

7. பெரு. திரு-1.1

8. பெரியாழ், திரு. 4,9:1

9. பெரியாழ், திரு,4.9:6.