பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி நின்று திகழும் காட்சியைப் பெரியாழ்வார் நமக்குக் காட்டுவர். திருவரங்கத்தில் அரங்க நகர் அப்பனுக்கு அடிமைத் தொழில் புரிந்த தொண்டரடிப் பொடியாழ்வார் இப்பெருமான் திருக்கோயிலில் அமைந்திருக்கும் சூழ்நிலையை, வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீ(து) அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணிதிரு அரங்கம்." (முரலும் - ஒலிக்கும், ஆலும் - ஆடும், அனவும் - தொட்டுக் கொண்டிருக்கும்.) என்று அழகான சொல்லோவியத்தில் எடுத்துக் காட்டுவர். இந்த ஞானப் பேரூரில் கிடந்த கோலத்துடன் திகழும் பெரிய பெருமாளை அடியிற் கண்டவாறு ஆழ்வார்கள் பாசுரங்களிட்டுப் பரவியுள்ளனர். 1. பொய்கையாழ்வார் 1 2. பூதத்தாழ்வார் 4 3. பேயாழ்வார் 1 4. திருமழிசையாழ்வார் 14 5. திருப்பாணாழ்வார் 10 6. குலசேகராழ்வார் 31 7. பெரியாழ்வார் 35 8. ஆண்டாள் 10 9. தொண்டரடிப் பொடியாழ்வார் 55 10. திருமங்கையாழ்வார் 72 11. நம்மாழ்வார் 12.மதுர கவியாழ்வார்

மட்டிலும் தமது ஆசாரியாராகிய நம்மாழ்வாரைத் தவிர வேறு எந்த எம்பெருமானையும் பாடவில்லை. மேற்குறிப்பிட்ட பாசுரங்கள் யாவும் 'நாலாயிரத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ் நாட்டில் 10. திருமாலை - 14.