பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் 5 வைணவ சமயத்திற்குப் புத்துயிர் அளித்தவர்கள். இவர்கள் எம்பெருமானது மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழங்கால் பட்டிருந்தமையால் 'ஆழ்வார்கள்’ எனப் பெயர் பெற்றனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. இந்த எண்ணங்களுடன் திருவரங்கம் பெரிய கோயிலை வந்தடை கின்றோம். திருவரங்கத்தின் சிறப்பு வரலாற்றுக் காலத்தையும் கடந்து நிற்கின்றது என்பதை இத்திருப்பதி குறித்து வழங்கும் புராணக் கதைகளால் அறியலாகும். ஒரு சமயம் இமயமலைச் சாரலில் கங்கை, யமுனை, சரசுவதி முதலிய நதிகள் தெய்வகன்னிகையர் வடிவங்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வமயம் வானவீதியில் சென்று கொண்டிருந்த கந்தருவன் ஒருவன் இவர்கள் இருந்த திசை நோக்கித் தொழுது அகன்றனன். யாரை வணங்கினான் அவன் என்பது குறித்து அந்த நதிக் கன்னிகையர் தமக்குள் பூசலிடத் தொடங்கினர். ஒவ்வொருவரும் தன்னைத் தான் அவன் தொழுது சென்றனனாக வாதாடினர். ஓடியாடி விளையாடிய விளையாட்டு இப்படிப் பூசலில் முடியவே சில நதிக் கன்னிகையர் அலுப்பும் சலிப்புமாக, இஃது என்ன தொல்லை? நம்முடைய கடமைகளை ஆற்றுவோம்’ என்று சொல்லிக்கொண்டு மக்களின் விடாமையும், பயிர்ப்பச்சைகளின் தாகத்தையும், பூமகளின் தாபத்தையும் தீர்க்கப் போய்விட்டனர். கங்கையும் காவிரியும் மட்டிலும் இறுதிவரை வாதாடிக் கொண்டிருந்தனர். சொற்போருக்கு முடிவு காணாததால் இந்த இரு நதி நங்கையரும் திருமாலிடம் சென்று முறையிட்டுத் தமது வழக்கினைத் தீர்க்குமாறு வேண்டினர். உடனே பெருமாள் புன்முறுவலுடன் கங்கையை, நோக்கி, "உன் உரிமையை எங்ஙனம் நிலை நாட்டுகின்றாய்?’ என்று வினவினார். கங்கை இறைவனது திருவடியைத் தொட்டு இங்கிருந்துதான் தோன்றினேன் நான் என்று கூற, பகவானும் அதனை ஒப்புக் கொண்டு கங்கையின் சார்பாகத் தீர்ப்புக் கூறினார். காவிரிக்குச் சினம் வந்துவிட்டது. கங்கையிற் புனிதமாய காவிரி' என்று என்றாவது ஒருநாள் புகழ் அடையவேண்டும் என்று உறுதிகொண்டு ஒருமையுள்ளத்துடன் அவள் தவம் கிடந்தாள். காவிரியின் தவம் அன்பு நெறியில் செல்லும் தொண்டர்கட்கு மகிழ்ச்சிஅளித்தது. தொண்டர் நாதனாகிய திருமாலும் அவளுடைய தவத்தைப் பாராட்டி, "நான் இங்கே வந்து சயனித்துக் கொள்ளப் போகின்றேன். அப்போது நீ எனக்கு