பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி மாலையாக அமையும் பேறு பெறுவாய். நீ கங்கைக்கும் மேம்பட்டவள் என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடப் போகின்றார் என்று வரம் அளித்தாராம். நாளடைவில் காவிரியினிடையே ஒரு தீவு தோன்றியது. அந்தத் தீவில் அரங்கநாதனோடு கூடிய விமானமும் தோன்றியது. ஆற்றின் நடுவிலுள்ள இந்த அரங்கம் இயற்கை வளத்தாலும் இறையருளாலும் அரிய பொலிவுடன் திகழ்ந்தது. தொண்டரடிப் பொடியாழ்வார் இதனை, "கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்.' (பாட்டு - ஏழன் உருபு, பொழில் - சோலை) என்று பாராட்டுகின்றார். அரங்க விமானத்தினுள்ளே மூலவரான அரங்நாதன் ஆயிரந்தலைகட்கு அறிகுறியான ஐந்து தலை களுடன் கூடிய அரவணையின்மீது பள்ளி கொண்டுள்ளான். இந்தச் சயனத் திருக்கோலத்தைத் தொண்டரடிப் பொடி யாழவார், 'குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக் கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல்எனக்கு உருகு மாலோ என்செய்தேன் உலகத் தீரே." (குடதிசை - மேற்குத் திக்கு; குணதிசை - கிழக்குத் திக்கு: பின்பு - முதுகு; அரவணை - பாம்புப் படுக்கை) என்று அநுபவித்துப் பாடுகின்றார். 'மேலைத்-திக்கு-உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் புனைந்துள்ள திருவபிடேகத்தையுடைய திருமுடியை வைப்பத னாலும், கீழைத் திக்கு - எல்லா உலகங்களும் உய்யும்படி

11. திருமாலை - 23.

12. மேலது. 19.