பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி விட்டு அசையப் போவதில்லை; உன்னுடைய தென்திசை இலங்கை நோக்கி இப்படியே சயனித்துக் கொண்டிருப்போம்” என்று உரைத்தான். இங்ஙனம் புராண வரலாறும் ஆழ்வார் கூறும் சயனத் திருக்கோலத்தை அரண் செய்கின்றது. 'பெரிய கோயில் உண்மையிலேயே பெரிய கோயில் தான். மதில் கிட்டத்தட்ட முக்கால் மைல் சதுரப் பரப்பை நிறைத்துக்கொண்டுள்ளது. ஏழாவது மதிலின் நீளம் 3072 அடி: அகலம் 2521 அடி; இவற்றிலிருந்து கோயில் எவ்வளவு பெரியது என்று தெரிகின்றதல்லவா?' ஏழு உலகங்களும் இத் திருக் கோயிலின் ஏழு திருச்சுற்றுகளாக (பிராகாரங்களாக) அமைந் துள்ளன என்று கூறுவர். இந்த மதில்கள் எழுந்த வரலாறு மிகவும் சுவையானது. அன்று வீடணன் கொண்டு வந்த அரங்க விமானத்தையும் அரங்கநாதனையும் காலப் போக்கில் காவிரி மணல் விழுங்கி விடுகின்றது. தர்மவர்மன் என்ற சோழ மன்னன் வேட்டைக்கு வந்தபோது ஒரு கிளி அவன் காதில் அங்கு அரங்கவிமானம் புதையுண்டு கிடக்கும் இரகசியத்தைக் கூறுகின்றது. காடுவெட்டி நிலந் திருத்திய சோழமன்னன் அரங்கவிமானத்தை வெளிக் கொணர்கின்றான். கோயில், கோபுரம், விமானம், மண்டபம் முதலியவற்றை நிறுவி அரங்கநாதனையும் எழுந்தருளப் பண்ணுகின்றான். கிளி சொன் னதை மறவாமல் கிளி மண்டபம் ஒன்றையும் கட்டுகின்றான். தன் பெயரால் தர்மவர்மன் திருச்சுற்று (பிராகாரம்) என்ற ஒன்றையும் எழுப்புகின்றான். இதன் பின்னர் வந்த மன்னர்களும் மக்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வாரு திருச்சுற்றாகக் கட்டி முடிக் கின்றனர். இப்படி ஏழு சுற்றுகள் ஏழு வீதிகளாக அமைந்து கிடக்கின்றன. வெளியிலிருந்து இவை முறையே மாடமாளிகை சூழ்திருவீதி அல்லது சித்திரைத் திருவீதி (7), திருவிக்கிரமன் திருவீதி (6), அகளங்கன் திருவீதி (5), ஆலிநாடன் திருவீதி (4), குலசேகரன் திருவீதி (3), இராசமகேந்திர சோழனது திருவீதி (2), அரங்கநாதனின் திருச்சந்நிதி திருச்சுற்று (1) என்று அமைந் துள்ளன. இவற்றைத் தவிர 'எட்டாவது பிராகாரம்' என்று சொல்லக் கூடியதாக ஒன்றுள்ளது. இஃது ஏழு பிராகாரங் களையும் அவற்றின் உள்ளிட்ட சந்நிதிகளையும் ஆடைபோல் வளைந்திருப்பதால் இஃது 'அடையவளைந்தான் வீதி' என்று வழங்கப்பெறுகின்றது. சுற்றியுள்ள மதிலின் உயரம் 20 அடி

14. தில்லைச் சிற்றம்பலமும், இங்ஙனமே மிகப்பெரியது. இதுவும் 'கோயில்’ என்றே சைவப் பெருமக்களால் வழங்கப்பெறுகின்றது - ஓர் ஊரின் பெயர் போல.