பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் 9 8 அங்குலம்; மேல்பாகம் 6 அடி அகலமுள்ளது. பெருங்கற் களால் கட்டப்பெற்ற இஃது இப்போது அதிகமாகக் காணப் பெறாது. அடையவளைந்தான் வீதியின் தென்மேற்கு மூலை யில் வெளியாண்டாள் சந்நிதியொன்று உள்ளது. ஆண்டாளு டன் பெரியாழ்வார் திருஅரங்கம் வந்தபோது இந்த இடத்தி லிருந்து காவிரியில் நீராட்டம் செய்து கொண்டதாகவும், அதன் நினைவாக பெரியாழ்வாரின் சீடரான வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் இவ்விடத்தில் ஆண்டாளுக்கும் பெரியாழ் வாருக்கும் இக்கோயிலை அமைத்தான் என்பதும் இதன் வரலாறாகும். ஆடிப் பதினெட்டு அன்று காவிரியைத் திருமணம் புரிந்து கொண்டு கோயிலுக்கு எழுந்தருளும் போதும், பங்குனி உத்தரத்தில் உறையூர் சோழகுலவல்லியை (கமல வல்லி) மணம் புரிந்து கொண்டு திரும்பும்போதும் வெளி ஆண்டாளுடன் அரங்கநாதன் மாலைமாற்றிக் கொள்ளுகின்றான். திரு அரங்கத்தின் ஏழு சுற்றுகளிலுமுள்ள திருமதில்களின் மொத்த நீளம் 32154 அடி, அதாவது கிட்டத்தட்ட ஆறு மைல் களாகும். மொத்தச் சுற்றுகளின் உள் சதுர அமைப்பு 155' ஏக்கர்களாகும். பெரிய கோயிலின் உட் கூறுகளை ஒரு தனிப்பாடல் நன்கு விளக்குகின்றது. மாட மளிகை சூழ்திரு வீதியும் மன்னுசேர்திரு விக்கிரமன் வீதியும் ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலிநாடன் அமைந்துறை வீதியும் கூடல் வாழ்குல சேகரன் வீதியும் குலவிராச மகேந்திரன் வீதியும் தேடரியதர்ம வர்மாவின் வீதியும் தென்ன ரங்கன்திரு வாரணமே. என்ற பாடலில் ஏழு திருவீதிகளும் கூறப்பெற்றுள்ளமை காணலாம். ஏழு சுற்றுகளோடு கூடிய இந்தக் கோயிலுக்கு சிறியனவும் பெரியனவுமாக 21 கோபுரங்கள் உள்ளன. இவை பல நூற்றாண்டுக் காலத்தில் எழுந்தவை. இவற்றின் சிற்ப நுணுக்கங் களை நோக்குமிடத்து ஒவ்வொன்றினதன் காலவரையறையும் நன்கு தெளிவாகும். இக்கோபுரங்களுள் 13 ஒரே நேராகத் தெற்கு வடக்காகத் தோன்றுகின்றன. கோயிலின் வளர்ச்சி தெற்கு - வடக்காக இருப்பதுவும் அரங்கநாதன் தெற்குநோக்கிப் பள்ளி