பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கொண்டிருத்தலும் குறிப்பிடத்தக்கவை. மேற்குறிப்பிட்ட 21 கோபுரங்களுள் கிழக்குப் பக்கத்திலுள்ள வெள்ளைக் கோபுரமும் (5-ம் திருவீதி) தெற்குப் பக்கத்திலுள்ள நான்முகன் கோபுரமும் (7-ம் திருவீதி) முக்கியமானவை. வண்ணம் பூசாது வெள்ளைச் சாந்தின் நிறமாகவே இருப்பதால் இது வெள்ளைக் கோபுரம் என்று வழங்கப்பெறுகின்றது. இருபத்தொரு கோபுரங் களுள் இதுவே யாவற்றிலும் உன்னதமானது; 164 அடி 2 அங்குலம் உயரமுடையது; ஒன்பது நிலைகள் கொண்டது. கோபுரத்தின் நிலப்பரப்பு 7410 சதுர அடி. திருவாயிலின் அகலம் 11" அடி; உயரம் 24' அடி. இதன் அளவையும், இதிலுள்ள கல்சாந்து களையும் கருதி இதன் நிறை 24,880டன் இருக்கலாம் என்று ஒருவாறு கணக்கிடப் பெற்றுள்ளது. நான்முகன் கோபுரம் அடைய வளைந்தான் திருவீதியின் திருவாயிலாக அமைந் துள்ளது. விசயநகர ஆட்சியில் எழுந்த ஒரு பெரிய கோபுரத்தின் தொடக்கம் ஆகும் இது. கிருட்டிண தேவராயர் ஆட்சியின் காலத்தில் எழுந்ததால் இராயர் கோபுரம் என்று இதனை வழங்குகின்றனர். 1565-ஆம் ஆண்டில் தளிக் கோட்டைப் (Talikota) போருக்குப் பின்னர் விசயநரகப் பேரரசு சின்னபின்ன மாக்கப் பெற்றதன் காரணமாக இக்கோபுரத்தின் திருப்பணி முற்றுப்பெறாது நின்றது. இதன் திருப்பணி முற்றப் பெற்றிருக்கு மாகில் இது 300 அடிக்குமேல் வளர்ந்து வானளாவி இருக்கும். இதன் தற்கால நீளம் 130 அடி:அகலம் 100 அடி உயரம் 43 அடி. திருக்கோயிலுக்குப் போகின்றவர்கள் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.' ஆழ்வார் பெருமக்கள் திரு அரங்கத்தைப்பற்றியும் அரங்க நகர் அப்பனைப்பற்றியும் கூறியுள்ள சில கருத்துகள் நம் மனத்தில் எழுகின்றன. முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கை யாழ்வார் திருவரங்கத்தைப் பெரும் பக்தியுடன் குறிப்பிடு கின்றார். “ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான் இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று கரு அரங்கத் துள்.கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்கம் மேயான் திசை"

15. அகாபில மடத்துத் தலைவர் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் 62 இலட்சம் செலவில், இதனை எழுப்பித் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது.

16. முதல் திருவந் -6.