பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி உண்டோ? இவ்வளவு சிறிய பருவத்தில் இறையன்பு கொண்டு பக்தியில் ஆழங்கால் படும்படியான பேறு வாய்ந்த பெண்ணைப் பெற்ற நான் என்ன நோன்பு நோற்றேனோ?” என்ற மகிழ்ச்சியும் தொனிக்கும். இவ்வாழ்வார் தன்னைக் காதலியாக வைத்துப்பேசும் பாசுரங்கள் திருநெடுந்தாண்டகத்தில் உள்ளன. பரகால நாயகி பேசுகின்றாள்: 'மின்இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் தன்அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்துஇலங்கு மகரம்சேர் குழையும் காட்டி, என்நலனும் என்நிறையும் என்சிந் தையும் என்வளையும்கொண்டு) என்னைஆளும்கொண்டு பொன்அலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னுடே புனல்அரங்கம் ஊர்என்று போயி னாரே' (திருஉரு-திருமேனி, கரி.யானை (குவலயா பீடம்); மகரம்-குண்டலம் ; நலன்-அழகு நிறை-அடக்கம்; சிந்தை-நெஞ்சம்; நறுஞ்செருந்தி -மனம் மிக்க சுரபுன்னை) 'புள் ஊரும் கள்வன் தன்பக்கலிலுள்ள அனைத்தையும் எனக்குக் காட்டி என் பக்கலிலுள்ள எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு போயினாரே' என்று பேசுகின்றாள். 'ஒருவருடைய வீட்டில் கொள்ளையடி க்கப்போன கள்வன் அவருடைய எல்லாச் சொத்துகளையும் பறித்து அவற்றை அவ் வீட்டுக் குடையவரது தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டுபோமாப் போலே இருக்கின்றது என்னை அடிமை யாக்கிக் கொண்ட நிலை' என்கின்றாள். நம்மாழ்வாரும் திருவரங்கத்தைப்பற்றித் தாயார் பாசுரங் களாகப் பதினொரு பாசுரங்களைத் திருவாய் மலர்ந்தருளி யுள்ளார். ஒரு பாசுரத்தைக் காண்போம்: 'கங்குலும் பகலும் கண்துயில் அறியாள், கண்ணநீர் கைகளால் இறைக்கும், சங்குசக் கரங்கள்! என்றுகை கூப்பும்; தாமரைக்கண் என்று தளரும்;

23. திருநெடுந்-25.