பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் வாயில் நீங்கலாக மற்ற வாயில்களின் வழியாக அழகிய மன வாளன் திருவுலாக் கொள்ளுகின்றார். தைமாதம் நடைபெறும் இரதோற்சவம் நடைபெறுங்கால் காலை, மாலை வாகனங் களிலும் பல்லக்கிலும் பெருமாள் இரு நாச்சிமார் களுடன் திருவீதியில் வலம் வருகின்றார். மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவத்தில் முதல் ஏழு நாட்கள் எழுந்தருள்கின்றார். இந்த வீதியின் தென்கிழக்கு மூலைக்கருகில் மணவாளமாமுனிகளின் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியின் கம்பத்தடியில் மாமுனிகள் யோகத்திலிருக்கும் போது அவ்விடம் சென்ற உத்தம நம்பிக்குத் தன் அவதார இரகசியத்தைக் காண்பித்தபடி ஒவிய உருவமாக எழுந்தருளியுள்ளனர். இதுவே இவர்தம் மூலத் திருஉருவம். இச் சந்நிதியினுள் இவர்தம் உற்சவத் திருமேனி மிகச் சிறியது. மாமுனிகளின் திருவருள் பெற்று அகலிங்கன் திருவீதிக்கு (5-வது வீதி) வருகின்றோம். இங்கிருந்துதான் கோவில் தொடங்குகின்றது. இதன் வடக்கு, கிழக்கு, தெற்கு பக்கங்களில் வாயில்களும் கோபுரங்களும் உள்ளன. தென்புற வாசல் கோபுரம் நான்கு திக்குகளையும் நோக்கும் நான்கு முகங்களோடு கூடியிருப்பதன் காரணமாக இது 'நான் முகன் கோபுரவாயில்’ என்ற திருநாமத்துடன் திகழ்கின்றது. இவ்வாயிலினுள் நுழைந்த தும் நடுவில்ஒரு நான்குகால் மண்டபத்தோடு ஒரு விசாலமான திறந்த வெளியையும் அதன் முன்புறம் ஒருபெரிய மண்டபத் தையும் காண்கின்றோம். பெரிய மண்டடமே அரங்கவிலாசம்; அரங்கநாதர் எழுந்தருளும் மண்டபம். திறந்த வெளியிலுள்ள நடு மண்டபத்தின் தூண் ஒன்றில்முறுக்கு மீசையும் திருகிக் கட்டிய கொண்டையும் கொண்ட பெரியவர் கூப்பிய கையுடன் நிற்பார் சிலை உருவில். இது எவ்விதத்திலும் கம்பர் சிலை அன்று என்பது தெளிவு; இது நாய்க்க மன்னர்களில், ஒருவரின் சிலை யாக இருக்கலாம். அரங்கமண்டபத்தின் வடகோயில் அரங்க நாதனுடைய விளக்குத் தூணும் (தீபஸ் தம்பம்) மகாபலி பீடமும் உள்ளன. திருக்கார்த்திகை நாளன்று சொக்கப் பனை என்று ஒருதென்னை மரத்துண்டை நட்டு அதைச் சுற்றிப் பனை ஒலை களைக் கட்டி அரங்கநாதனுக்கு ஆரத்தி செய்த பந்தத்தினால் தீயை வைத்து கார்த்திகைத் தீப விழா கொண்டாடப் பெறு கின்றது. அரங்கமண்டபத்தைச் சுற்றி ஆழ்வார் சந்நிதிகள், நாத முனிகள் சந்நிதி உள்ளன. நாத முனிகள் சந்நிதியில் ஆளவந்தார், திருவரங்கப் பெருமாளரையர் சேவை சாதிக்கின்றனர்.