பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் நரசிம்மன் தான் எழுந்தருளியிருந்த கோபுரத்தினின்றும் தான் உகந்ததற்கு அடையாளமாக கர்ச்சித்தார் என்றும் கூறுவர். இதற்கு அடுத்த அருளாளப் பெருமாள் பெரு மண்டபத்தில் பதினேழு நாட்கள் உடையவருக்கும் யக்ஞமூர்த்திக்கும் நடந்த சமயவாதப் போரில் மேட்டு அழகிய சிங்கர் தம் தலையசைத்து உடையவரை ஏற்று யக்ஞமூர்த்தியின் தோல்வியை வெளிப் படுத்தினதாக திவ்விய சூரி சரிதை கூறும். சீரங்க நாச்சியார் சந்நிதிக்குக் கிழக்கில் கோபுர வாயிலை ஒட்டி வேதாந்த தேசிகரின் சந்நிதி உள்ளது. அடுத்து பெரியவாச்சான் பிள்ளை திருவேங்கட முடையானுடன் காட்சி தருகின்றார். சீரங்க நாச்சியார் சந்நிதிக்குக் கிழக்கிலிருப்பது ஆயிரக்கால் மண்டபம். இதன் நீளம் 500 அடி, அகலம் 160 அடி, 951 ஒற்றைக் கற்களாலான தூண்களை யுடையது. இதன் நடுவிலிருக்கும் சிறிய மண்டபம் திருமாமணி மண்டபம் ஆகும். இங்குத்தான் மார்கழி மாதம் பகல்பத்து இராப்பத்து என்ற திருமொழி - திருவாய்மொழித் திருவிழா நடைபெறும். இப்பிராகாரத்தில் ஆயிரம்கால் மண்டபத்தின் முன் உள்ள திறந்த வெளிக்கும் கிழக்கேயுள்ளது வெள்ளைக் கோபுரமாகும். இக்கோயில் வாயிலையொட்டி சேஷகிரிராயர் அணிதிகழ் மண்டபமும் இதற்குத் தெற்கில் பிள்ளை உலக ஆசிரியரின் சந்நிதியும் உள்ளன. இதற்குத் தெற்கி லிருப்பது பாஷ்யக்காரர் எனப்படும் இராமாநுசரின் சந்நிதி யாகும். இந்த இடம் ஆதியில் சீரங்க நாதனின் வசந்தமண்டப மாகஇருந்தது. உடையவர் திருநாடு அலங்கரித்ததும், அவரது பூத உடம்பை அரங்கநாதன் கட்டளைப்படி வசந்த மண்டபத் திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பெற்றுள்ளது. இது அவரது சந்நிதியாகத் திகழ்கின்றது. நாடோறும் இங்குத் திராவிட வேத பாராயணம் நடைபெறுகின்றது. இச்சந்நிதியின் மண்டபத் தில் உடையவரின் வரலாறு ஓவியத்தால் தீட்டப் பெற்றுள்ளது. திருவரங்கத்து அமுதனார் உடையவர்மீது இயற்றியுள்ள இராமாநுச நூற்றந் தாதியைக் கேட்டுக் கொண்டே அரங்கநாதன் தமது பிரம்மோற் சவம் 10-ஆம் நாளில் திருவீதிவலம் வருங்கால் இந்தச் சந்நிதிக்கு வந்து உடையவருக்கு அருள் செய்வார். இச்சந் நிதியின் முன் மண்டபத்திற்கு மேற்கில் திருமதிலையொட்டி ஆதி யில் குதிரை கட்டும் இடமாகவும் பசு மண்டபமாகவும் இருந்த கட்டடம் இப்போது (1935) நூல் நிலையமாகவும் அரும் பொருட் காட்சிச் சாலையாகவும் மாற்றப் பெற்றுள்ளன. இவற்றிற்கு அடுத்து திருக்கோயில் ஆட்சியர் அலுவலகம் உள்ளது.