பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். இப்போது பக்தர் கள் உற்சவருக்கு அருகிலுள்ள ‘குலசேகரன் படி'க்குப் பக்கம் நின்று சேவிக்கின்றனர். திருவணுக்கன் திருவாயிலினுள் நுழைந்ததும் விமானப் பிரதட்சிணமாகிய திருவிண் ஆழி சூழப்பெற்ற திருச்சந்நிதியை அடைகின்றோம். இதனைச் சுற்றிலும் உள்ளது தர்மவர்மாவின் திருவீதி (1-வது சுற்று). திருவரங்க விமானம் ஏழு திருச்சுற்று களுக்கும் நடுவிலுள்ளது, பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பரவாசுதேவர் இதிலிருந்து சேவை சாதிக்கின்றார். விமானத்தின் வெளியில் மேல் திசையில் கஜானனும் (விநாயகர்) கீழ்த்திசையில் அரங்க நாதனின் யோகமாயையாகிய துர்க்கையும் விமானத்தைக் காத்து வருகின்றனர். இதனைத் திவ்விய கவி, அருமறை யோதியஓர் எட்டெழுத்தும் அயன்ப டைத்த இருநிலம் மீதினில் யாவருங்காண இலங்கு துத்திக் குருமணி நாகத்தில் எங்கோன் விழிதுயில் கொண்டரிளத் திருமதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே* (அயன் - நான்முகன்; இருநிலம் - பெரிய நிலம்; காண சேவிக்க, துத்தி - படப் புள்ளி; குருமணி-மாணிக்கம்; நாகம் - அனந்தாழ்வான்; விழி துயில் - துயிலாத் துயில்) என்ற பாடலால் காட்டுவர். 'ஓம்' என்ற பிரணவம் விமானமாகவும், நமோ நாராயணாய' என்பதிலுள்ள ஏழு எழுத்துகள் ஏழு மதில்களுமாகவும் அமைந்துள்ளன. இந்த விமானத்தின் முன் பகுதியில் நிற்பது காயத்திரி மந்திரத்தின் அறிகுறியாக நிற்கும் 24 துண்களால் அமைக்கப் பெற்ற காயத்திரி மண்டபம். இந்த மண்டபத்தின் நடுவில் பெருமாளுக்குத் தளிகைகள் சமர்ப்பிக்கும் அமுது பாறை உள்ளது. பிராகாரத்தின் நான்கு மூலைகளிலும் நாராயணர், நாபி நளினர், நாகசயனர், நரசிம்மர் என்பவர்கள் அரங்க

33. திருவரங். மாலை.95.