பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் விமானத்திற்குக் காவல் புரிகின்றனர். இதனுள் முதற்கண் புலப்படுவதே வட்டவடிவமாயுள்ள திருஅரங்கம். அதன் முதலடியில் கணநாதரான தும்பிக்கையாழ்வாரும், அதன் வலக்கடையில் துர்க்காதேவியும் காப்புச் செய்கின்றனர். இதன் சிகரமே பொன்தட்டால் வேயப் பெற்ற திருஅரங்க விமானம். திருவிண்ணாழியின் சுற்றிய முப்புறச் சுவரிலும் சுமார் 400 ஆண்டுகட்கு முற்பட்ட 108 வைணவத் திருத்தலங்களின் உண்மைத்தோற்றங்களை ஒளிப்படம் (Photo) பிடித்துக் காட்டுவன போல் அழகியவண்ண ஓவியங்கள் உள்ளன. இதன் விவரங்கள் அடங்கிய தெலுங்குக் குறிப்புகள் ஒவ்வொன்றின் கீழும் உள்ளன. இவற்றைக் கண்ணுற்றும் வலம்வந்தும் அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கநகர் அப்பனைச் சேவிக்கின்றோம். திருவரங்கத்தில் அரங்கநாதன் பள்ளி கொண்டது எதற்காக என்பதைக் குலசேகரப் பெருமான், வன்பெருவா னகம்உய்ய அமரர் உய்ய மண்உய்ய மண்உலகில் மனிசர் உய்யத் துன்பமிகு துயர்அகல அயர்வுஒன்று இல்லாச் சுகம்வளர அகமகிழும் தொண்டர் வாழ." (வானகம்-சுவர்க்கம்; மண்-பூ உலகம்; அமரர்.தேவர்; துயர்-பாவம்; அயர்வு-துக்கம்) என்று விளக்குவர். இதற்காகத்தான் அரங்கப்பெருமான் தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளான் என்பது இவர்தம் கொள்கை. சுமார் பதினைந்து அடி நீளமுள்ள கருவறை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான் திருவனந்தாழ்வான். அவனது பாயலில்தான் அழகாகத் திருக்கண் வளர்கின்றார் அரங்கநாதன்-'கருணைமாமுகில். இவர் வலக்கையால் தனது திருமுடியையும், இடக்கையால் தனது திருவடிகளையும் காட்டித் தானே எல்லா உலகங்கட்கும் நாதன் என்றும், எல்லோரும் தனது திருவடிகளைப் பற்ற வேண்டும் என்றும் போதிக்கின்றார். திருஅனந்தாழ்வானும் அரங்கநாதனும் சுதை உருவில் உருவானவர்கள். அனந்தாழ்வான் பொன் முலாம் பூசிய

34. பெரு. திரு. 1.10.