பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி தகடுகளால் பொதியப்பெற்றுள்ளான். அரங்கனோ கன்னங்கரிய வடிவினராகத் தைலக்காப்புள்ளே புதைந்து கிடக்கின்றார். அவர்தம் அகன்ற மார்பில் முத்தாரம், கெளஸ்துபம், புரளும் வனமாலை காட்சி அளிக்கின்றன. தலையில் நீண்டுயர்ந்த கிரீடம் அணி செய்கின்றது. இத்தனைக் கோலத்துடன் அவர் ஏனோ தனிமையை நாடியுள்ளார். பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இவர்கட்குக்கூட அங்கு இடம் இல்லை. திருவுந்தியினின்றும் நான்முகனும் எழவில்லை. இந்தச் சயனத் திருக்கோலத்தைத்தான் இளங்கோ அடிகள், நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந்தகலாது படிந்தது போல ஆயிரம் விரிந்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும.” (திறல்-வலிமை; பாயல்பள்ளி-பாம்புப் படுக்கை, துருத்தி-ஆற்றிடைக் குறை, தீவு) என்று காட்டியுள்ளார். இந்தக் கிடந்தத் திருக்கோலத்தின்முன் நின்ற திருக்கோலத் தில் செப்புச்சிலை வடிவில் அழகிய மணவாளன் இரண்டு துணைவியருடன் தங்கமஞ்சத்தில் காட்சி தருகின்றார். இருவரை யும் சேவித்து உளங்குளிர்கின்றோம். பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.” (அச்சுதன் - அச்யுதன் - என்றும் நழுவாதவன், தன் அடி பணிந்தோரை நழுவ விடாதவன்; அமரர் - தேவர்)

35. சிலப் காடுகாண். அடி (35-40)

36. திருமாலை-2