பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பாசுரத்தைப் பாடிப் பரவு கின்றோம். எய்ப்பென்னை வந்து நலியும்போ தங்கு ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே.” (எய்ப்பு-இளைப்பு: நலியும்போது-தொல்லை தரும் போது) என்ற பெரியாழ்வார் பாசுரமிட்டு நாமும் விண்ணப்பிக்கின் றோம். நாவுண்டு நீவுண்டு நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ-பூவுண்டு வண்டுறங்கு சோலை மதில்அரங்கத் தேஉலகை உண்டுஉறங்கு வான்ஒருவன் உண்டு." என்று அவன் அருள் நமக்கு என்றும் உண்டு என்ற உறுதியையும் கொள்ளுகின்றோம். நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும் தோளும் தொடர்ந்துஎன்னை ஆளும் விழியும் துழாய்மணக்குந் தாளும் கரமும் கரத்திற்சங் காழியும்தண் டும்வில்லும் வாளும் துணை வருமே தமியேனை வளைந்து கொண்டே." (வளைந்து கொண்டு-சூழ்ந்து கொண்டு) என்ற திவ்விய கவியின் அநுபவத்தைப் பெறுகின்றோம். சீர்விந்த உந்தித் திசைமுகனால் அல்லாது.என் சோர்விந்த சொல்லிற் சுருங்குமோ- ஆர்வம் ஒருவரங்கங் கோயில் உகந்தவரை யாள்வான் திருவரங்கம் கோயில் சிறப்பு ."

37. பெரியாழ். திரு. 4.10:1.

38. தனிப்பாடல்

39. திருவரங். மாலை - காப்பு.

40. நூற்.திருப்.அந். 1.