பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி

(சீர்-சிறப்பு:உந்தி-கொப்பூழ்திசை முகன்-நான்முகன்; சோர்விந்த - குற்றம் பொருந்திய, ஒருவர். ஒருவர்; அங்கு அங்கு - அந்தந்த விடங்களில்; ஆர்வம் ஒயில்-ஆசை ஒழிந்தால், அவரை-அந்தப் பற்றற்ற அன்பரை; உகந்து-விரும்பி, ஆள்வான்-அடிமை கொள்வான்) திருவரங்கத்தின் பெருமையை நான்முகன் ஒருவனால் தான் கூறமுடியும் என்ற கருத்துக் கொண்ட திவ்வியகவியின் இப்பாசுரத்தையும் ஓதி உளங்கரைகின்றோம். இதுகாறும் கண்டு அநுபவித்தவற்றையெல்லாம் சுருங்க உரைக்கும் அநுபவமாக, ஆராத அருளமுதம் பொழிந்த கோயில்; அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோயில்; தோலாத தனிவீரன் தொழுத கோயில்; துணையான வீடணற்குத் துணையாம் கோயில்; சேராத பயன்எல்லாம் சேர்க்கும் கோயில்; செழுமறையின் முதல்எழுத்துச் சேர்ந்த கோயில்; நீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்; திருவரங்கம் எனத்திகழும் கோயில் தானே." (ஆராத-தெவிட்டாத அருள் அமுதம்-அரங்கன்; அம்புயத்தோன் -நான்முகன்; தோலாத தனி வீரன்-இராமன்; சேராத-வேறு இடத்தில் பெற முடியாத, முதல் எழுத்து-ஓம் என்ற பிரணவம்; அரங்கம் என்பது விமானத்தின் பெயர் ; இது திருப்பதிக்குப் பெயராயிற்று (தானியாகு பெயர்) என்ற வேதாந்த தேசிகரின் ஓத ஓதத் தெவிட்டாத திருப் பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஓதிய வண்ணம் நாம் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்புகின்றோம்.

41. தே. பி. - 81.