பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உறையூர் அழகிய மணவாளன்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்து' பெரும்பயன் அடைவதற்கு அறிய வேண்டிய உறுதிப் பொருள்கள் ஐந்து என்று கூறும் வைணவ சமயம். இவை, இறைவன் இயல்பு, உயிர் இயல்பு, உயிர் இறைவனை அடைவதற்கு உள்ள தடையின் இயல்பு, அத்தடையை நீக்கி உயிர் இறைவனை அடைதற்குரிய உபாயம் (வழி), இறைவனை அடைந்து பெறும் பயன் என்பனவாம். இவை ஐந்தும் அர்த்த பஞ்சகம்’ என வழங்கப்பெறும். இறைவன் இயல்பு-ஐம்பொறிகளாலும், மனத்தாலும் உணரும் அளவுக்கு அப்பாற்பட்ட தன்மையும் ஒப்புயர்வற்ற தன்மையும் பிறவுமாகும். அவனது சிறப்பியல்பு. மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம், உரவினோடு இணைந்திருப்பது ஏங்கிய எளிவே (உரம்-மார்பு: ஆப்புண்டு-கட்டுண்டு; இணைந்திருந்தது - பொருந்தி இருந்தது; எளிவு-எளிமைக் குணம்) என்று நம்மாழ்வார் கூறிவாறு, இத்தகைய மேன்மையுடைய னாயினும் அடியார்க்கு எளியனாக இருக்கும் நிலைமை. உயிரின் இயல்பு-ஞானமும் ஆனந்தமும் உடைமை; அதன் சிறப்பியல்பு தன்னை இறைவனுடைய அடியார்க்கு அடியனாகக் கொள்ளு தல். அதாவது நம்மாழ்வார் தன்னை 'திருமாலுக்கு, உரிய தொண்டர் தொண்டர் தொண்டன்' என்றும்,

நீக்கம் இல்லா அடியார்தம்

அடியார் அடியார் அடியார்-எம் கோக்கள்,' 1. குறள்-4.

2. திருவாய்: 1.3.2.

3. மேலது 6.9:1

4. மேலது 8.10:10