பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 சோழநாட்டுத திருப்பதிகள முதற்பகுதி என்றும், 'நேர்பட்ட தொண்டர், தொண்டர், தொண்டர், தொண்டன்' என்றும் கொள்ளுதல். தடையின் இயல்பு-'யான்' என்னும் அகப்பற்றும், 'எனது' என்னும் புறப்பற்றும் ஆகும். அதன் சிறப்பியல்பு உலகப் பொருள்களில் பற்றற்று இறைவன் திருவடிக்கண் தொண்டு செய்யுமிடத்தும் 'யான் செய்கிறேன்' என்று கருதுவது அகங்காரமாகும். உபாயமாவது இறைவன் திருவடிகளே தஞ்சம் என்று அடைதல்; அதன் சிறப்பியல்பு-நாம் சரண் புகுந்தாலும் அவன் அருளில்லாதபோது பயன் எய்தாதாதலின், அவன் அருளையே உபாயமாகக் கொள்ளுதல். பயனாவது, இறைவன் திருவடிக்கண் எல்லாத் தொண்டுகளும் செய்யப்பெறுதல்; அதன் சிறப்பியல்பாவது-உயிர், தன் விருப்பப்படித் தான் விரும்பிய தொண்டுகளைச் செய்து மகிழாமல், இறைவன் விருப்பப்படி அவன் விரும்பும் தொண்டுகளைச் செய்து, அவன் மகிழ்வது கண்டு தான் மகிழ்தலாகும். இத்தனையும் உள்ளடக்கித்தான் நம்மாழ்வார் 'அறிந்தறிந்து தேறித்தேறி' என்று கூறினார் என்று பெரியோர் பணிப்பர். இந்த அர்த்த பஞ்சக ஞானத்தைத்தான் 'திருமந்திரம்' பேசுகின்றது, இதுதான் திருவாய்மொழியிலும் நுவலப் பெறுகின்றது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவை குறிப்பிடுவதும் இந்த அர்த்தபஞ்சக ஞானத்தையே. இந்த விவரங்களை எல்லாம் சுருக்கி, 'மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகி-தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதத் (து) இயல்’ என்று அழகிய வெண்பாவால் அருளிச் செய்வர் பராசரபட்டர். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் உறையூர் அழகிய மணவாளன் சந்நிதிக்குப் புறப்படுகின்றோம். உறையூரைக் கோழி என்று குறிக்கும் சங்க இலக்கியம்."

5. மேலது 8.9:11

6. மேலது 4.7:7

7. திருவாய் மொழித் தனியன்

8. புறம்-67