பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கரம்பனுர் உத்தமன் வைணவ தத்துவங்களாகிய சித்தும் அசித்தும் ஈசுவரனுக்கு உடலாக இருக்கும் நிலையை 'சரீரசரீரி பாவனை (உடல்-உயிர் உறவு) என்று குறிப்பிடுவர் மெய்விளக்க இயலார். இறைவனது இந்த இருப்பை 'உடல் மிசை உயிர் எனக் கரந்துளன்' என்று நம்மாழ்வார் குறிப்பிடுவார். திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலும் சற்றுச் சேய்மை யிலும் உள்ள திருப்பதிகளைச் சேவிக்கும் எண்ணத்துடன் திருச்சி மாயவரம் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் நம் மனத்தில் மேற்குறிப்பிட்ட தத்துவம் குமிழியிடத் தொடங்குகின்றது. நம்மை ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கின்றது. திருச்சியிலிருந்து நகரப் பேருந்து மூலம் கரம்பனூர் என்ற உத்தமர் கோயில் என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் புறப்படுகின்றோம். கதம்ப முனிவருக்கு எம்பெருமான் நேர் காட்சி தந்த திருத்தலமானது பற்றிக் கரம்பனூர் என்று திருநாமம் பெற்றது. கதம்பனூர் என்ற பெயர் கரம்பனூர் என்று மருவி விட்டது போலும். இன்று உத்தமர் கோயில் என்ற திருப்பெயரே பெருவழக்கிலுள்ளது. இத்திருத்தலம் திருச்சி நகரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து (மீட்டர் அகல வழி) வடதிசையில் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. திருவரங்க நிலையத்திலிருந்து (மீட்டர் அகலவழி) மூன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. உத்தமர் கோயில் என்ற இருப்பூர்தி நிலையமும் உள்ளது. திருவரங்கத்திலிருந்து இருப்பூர்தி மூலம் இங்கு வரலாம். இந்தத் திருத்தலம் திருச்சி-சேலம் பெருஞ்சாலையிலும் உள்ளது. ஆனால் இவ்வூருக்கு அடிக்கடி நகரப்-பேருந்து வசதிகள் இருப்பதால் நாம் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளு கின்றோம். பேருந்தில் வரும்போதே நம்மனம் மேற்குறிப்பிட்ட வைணவ தத்துவத்தில் ஆழங்கால் படுகின்றது. உடல் மிசை உயிரெனக் கரந்துளன்’ என்ற ஆழ்வார் வாக்கினைச் சிந்திக்

1. திருவாய். 1.1.12.