பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

திருவெள்ளறை அஞ்சன வண்ணன் சென்று அணைகின்றன (6). தாமரைப்பூக்களிலுள்ள தேனி னைப் பருகின மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக வண்டுகள் இனிய பாக்களைப் பாடுகின்றன (7). மாமரங்களிலும் தாழை மரங் களிலும் மாறாமல் பூத்திருக்கும் மலர்களையுடைய சோலைகளில் சுரும்பு என்னும் ஒருவித சாதி வண்டுகள் 'தென்ன தென்ன' வென இசைபாடுகின்றன (8). ஓங்கி வளர்ந்த அசோக மரத்தின் சிவந்த பூக்களின்மீது வண்டுகள் சஞ்சரிக்க அதனைக் கண்ட குயில்கள் அந்தோ? இவ்வண்டுகள் நெருப்பில் அகப்பட்டன வே' என்று கூவுகின்றன (9). இத்தகைய சூழலை யுடைய திருவெள்ளறை 'மஞ்சுலாமணி மாடங்கள் சூழ்ந்தது (10). இந்த அழகிய சூழ்நிலையில் கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் எம்பெருமான் யார்? பெரிய மழு ஏந்நி இருபத் தொரு தலைமுறையில் க்ஷத்திரியப் பூண்டுகள் ஒழியுமாறு செய்த பரசுராமன்(1); நான் மறைகளைத் தோற்று வருந்தின நான்முகனுக்குக் கருணைக் கூர்ந்து ஹயக்ரீவாவதாரம் செய்து இத்திருமறைகளை மீட்டுக் கொண்டுத்தவன்(2); ஏழுலகங்களை யும் ஒருங்கே நலிந்து கொண்டிருந்த இரணியன் மார்பு இரு கூறாகும்படி தன் திருக்கை நகங்களாலேயே பிளந்த பெருமான் (3); பாரதப் போரில் எதிரிகளான அரசர்களை மாளச் செய்து பஞ்சபாண்டவர்கட்கு அரசினைப் பெற்றளித்தவன்(4); உடற் பண்பாலும் உயிர்ப் பண்பாலும் சிறந்தவளான பூமிப் பிராட்டியார் பிரளயப் பெரு வெள்ளத்தில்புக்கு அழுந்தினபோது கோலவராக வடிவு சொண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியைத் தோண்டி எடுத்துத் தன் கோட்டிடை வைத்தருளிய கோமான்(5); தேவர்கட்கு அமுதளிப்பான் வேண்டி ஆமை யாகத் திருவவதரித்த ஆதிமூலன்(6): இராவணனின் பத்துத் தலைகளும் அற்று விழும்படி கோலவில்லினை வளைத்து அம்பெய்த கோமகன்(7); முன் பொருகால் இவ்வுலகங் களெல்லாம் அறிவுகெட்டு அஞ்ஞான இருளில் மூழ்கியிருந்த பொழுது அன்னமாகி அருமறை பயந்த வள்ளல்(8); மாவலி யின் வேள்வி பூமியில் வாமன மாணியாக எழுந்தருளி அவனிடம் மூவடிமண் இரந்து பெற்று அப்பொழுதே அகல் இடம் முழுவதையும் சுவாதீனப்படுத்திக் கொண்ட பரமன்(9); இங்ஙனம் பெருமைகள் எல்லாம் ஒருங்கே கொண்ட அஞ்சன வண்ணன் திருவெள்ளறையில் கோயில் கொண்டுள்ளான். அந்தப் பெருமானை நிற்பனிந்தெழுவேன்; எனக்கு அருள் புரியே' என்று வேண்டுகின்றார் திருமங்கையாழ்வார்.