பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

அன்பில் திருவடி அழகிய நம்பி கருத்தாகும். இங்ஙனம் இருத்தல் அவனு டைய ஆச்சரிய சக்தியாகும். இதனையே திவ்விய கவி பிள்ளைப் பெருமாளய்யங்கார்

“சின்னூல் பலபலவாயால் இழைத்துச் சிலம்பி பின்னும் அந்நூல் அருந்தி விடுவதுபோல் அரங்கர் அண்டம் பன்னூறு கோடி படைத்தஅவை யாவும் பழம்படியே மன்னூழி தன்னில் விழுங்குவர்போத மனம் மகிழ்ந்தே' (சின்னூல் - மெல்லிய நூல்; இழைத்து - நூற்று; சிலம்பி - சிலந்திப் பூச்சி; மன்ஊழி தன்னில் - மகா பிரளயத்தில்; போத - மிகவும்; பழ படியேமுன்போலவே) என்ற மிக அழகான உவமை கலந்த பாடலாக விளக்குவர். சிறிய சிலந்திப் பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண்டாக்கிப் பின் அதனை விழுங்குகின்றது. நூலை உண்டாக்குவதற்கு முதற் காரணமான சிலந்திப்பூச்சி தன் நிலையில் அழிவதில்லை. ஒரு சிறிய சிலந்திப்பூச்சிக்கு இச்செயல்கூடுமேல், தன் நிலையில் சிதைவின்றித் தான் உலகிற்கு முதற் காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அரியதாகுமோ? 'ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசக்திக்குக் கூடா தொழியாதிறே' என்ற தத்துவத்திரய வாக்கியமும் ஈண்டு சிந்திக்கத் தக்கதாகும். இந்தச் சிந்தனைகளுடன் அன்பில் என்ற திருத்தலத்திற்குப் பயணப்படச் சித்தமாகின்றோம். திருச்சி மாயவரம் விடுதியி லிருந்து பேருந்துமூலம் அன்பிலுக்கு வருகின்றோம். இத்திருத் தலம் தென்னிந்திய இருப்பூர்தி திருச்சி-விழுப்புரம் குறுக்குப் பாதையிலுள்ள இலால்குடி நிலையத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து பல இடங்கட்குப் பேருந்து செல்லும் வழியிலும் உள்ளது. இலால்குடி நிலையத்திலிருந்து அன்பிலுக்குப் போகக் குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள், பேருந்துகள் கிடைக்கும். அன்பில் ஒரு சிறிய ஊர். சத்திரங்களும் உணவு விடுதிகளும் பிற வசதிகளும் இங்கு இல்லை. நேராகத் திருக்கோயிலுக்கு

2. திருவரங். மாலை, 18.

3. தத்துவத்திரயம்-ஈசுவரப்பிரகரணம்-சூத்திரம், 29