பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி கொண்டுள்ளான் என்றும், கோட்டியூர், திருப்பேர் நகர் போன்ற இடங்களில் விளையாடுபவனும் குழந்தை கண்ணனே என்றும்,' பாலக்கிரீடைபுரியும் கண்ணனே திருப்பேர் நகரில் கிடக்கும் நாரணன் என்றும் பாடிப் பகவதநுபவம் பெறுகின்றார். திருமங்கையாழ்வாரும் சாளக்கிராமத்திலிருப்பவனும்,' திருவரங்கத்து எம்பெருமானும்," திருவழுந்துார் ஆமருவி அப்பனும்,' திருப்பேர் நகர்ப் பெருமானே என்று முடிவு கட்டுகின்றார். பல திருப்பதிகளைக் கூறும் பதிகத்தில் திருப்பேர் நகரையும் சுட்டுகின்றார்,' இவற்றைத் தவிர ஒருமுழுப் பதிகத்தில் தென்திருப்பேர் நகர் எம்பெருமானை அநுபவித்து இனியராகின்றார். ஊரின் சூழலை செய் அலர் கமலம் ஓங்கும் தென்திருப்பேர்’ (1), திங்கள் மாமுகில் அணவு செறி பொழில்’ (2), தேனமர் பொழில்கள் சூழ்ந்த தென் திருப்பேர் (4), 'சேலுகள் வயல் திருப்பேர் (9)என்று பேசுகின்றார். ஊரைப் பற்றி 'பெருவரை மதிகள் சூழ்ந்து பெருநகர் (3), திண்ணமா, மதிகள் சூழ்ந்த தென்திருப்பேர் (7),"செம்பொனார் மதிள்கள் குழ்ந்த, தென்திருப்பேர்’ என்று நகர் அமைப்பினைக் காட்டி, இப்படிப்பட்ட நகரில் நலக்கொள் நான்மறை வல்லார்கள் (6) வாழ்வதையும் குறிப்பிடுகின்றார். அடுத்து, எம்பெருமானை ஆழ்வார் அனுபவிக்கும் விதம் அற்புதமானது. ஆழ்வார் கூறுவார்: திருவாழி, திருச்சங்குகளைக் கைகளில் உடையவன்; காளமாமுகில்வண்ணன் தன்னுடைய சிறப்பியல்புகளையெல்லாம் தன் அடியார்கட்குக் காட்டிக் கொடுப்பவன்; தன் திருவடிகளைப் பணிபவர்கட்கு அடிமைத் தன்மையை அருள்பவன்; திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவன் (1); பிரளய காலத்தில் கடல் சூழ்ந்த உலகம் ஏழையும் உண்டு, பின்னர் உமிழ்ந்தவன் (2); நான்முகனைத் திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவன்; தன் மார்பிலுள்ள வியர்வை நீரால் சிவனின் சாபத்தை தொலைத்து 'நீ முன்போல்

6. பெரியாழ் திரு 2.5:1

7. மேலது - 2.6:2.

8. மேலது - 2.9:5,

9. பெரி.திரு 1.5:4.

10. மேலது 5.6:2.

11. மேலது 7.6:9

12. மேலது 10.1.4:10.