பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பேர் கிடக்கும் திரு நாரணன் 53 உம்பருலகை ஆளக்கடவாய்' என்று விடை கொடுத்தவன் (3,4); 'வக்கரன் வாய் முன் கண்ட மாயனே' என்று வணங்கின தேவர்களின் வேண்டுகோட்கு இரங்கி நரசிம்மனாகி இரணி யனின் உடலை நகங்களால் கிழித்துத் திருவுள்ளம் மகிழ்ந்தவன் (5); விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மாநகர்க்கிறைவனின் இருபது புயங் களையும் துணித்தவீரன் (6); அளவு மீறி வெண்ணெய் அமுது செய்ததால் யசோதை பிராட்டி மத்தினால் புடைப்பதாக வெருட்டிக் கண்ணினுண் சிறுத்தாம்பினால் கட்டுவதற்கு இசைந் திருந்த கண்ணன் (7); நப்பின்னைப் பிராட்டியின் திருமேனியை அணைவதற்காக ஏழு எருதுகளைக் கொன்றொழித்தவன் (8): இத்தகைய எம்பெருமான் தன் இதயகமலத்தில் இடைவிடாது வீற்றிருப்பன். இவனது திருநாமங்களை நாள் தோறும் ஏத்தித் தாம் உய்ந்தமையை ஒரு தரத்திற்கு ஒன்பதுதரம் எடுத்துக்கூறி இனியராகின்றார் ஆழ்வார்.' நம்மாழ்வார் திருப்பேர் நகர் எம்பெருமானை ஆரா அமுதாய் அநுபவிக்கும் திறன் சொல்லுந் தரமன்று.' 'திருமாலிருஞ் சோலை மலைஎன்றேன், என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்'(1) என்று எடுத்த எடுப்பில் ஒரு சிறு காரணத்தை முன்னிட்டு எம்பெருமான் தம் நெஞ்சில் புகுந்தபடியை எடுத்துக்கூறி வியக்கின்றார் ஆழ்வார். 'திருமாலிருஞ்சோலை மலை என்ற ஒருசொல் தற்செயலாக வெளி வந்தது. மற்ற மலைகளைக் காட்டிலும் இம்மலைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டென்று கருதி அறிவு நிலையில் வைத்துச் சொன்னேனல்லேன். கொக்குமலை, குருவிமலை என்று பல மலைகளையும் சொல்லிப்போகிற வரிசையில் 'திருமாலிருஞ் சோலை மலை’ என்று இதனையும் சொன்னேன். இதனையே ஒரு பற்றாசாகக் கொண்டு அவன் பெரிய பிராட்டியோடு என் நெஞ்சு நிறையப் புகுந்தான்' என்கின்றார் ஆழ்வார். "பேரே யுறைகின்ற பிரான்இன்று வந்து

13. மேலது. 5.9.

14. திருவாய். 10.8.