பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி பேரேன் என்றுஎன் நெஞ்சுநிறையப் புகுந்தான்’(2) (பேரே-திருப்பேர் நகரிலேயே) என்று புகுந்த நிலையைப் பேசுகின்றார். எல்லா உலகங் களையும் காத்தும்கூட தான் ஒன்றும் செய்யாதவனாகக் குறைபட்டிருந்தான் எம்பெருமான் ஆழ்வார் திருவுள்ளத்தில் வாசம் கிடைக்கப்பெறாமையினாலே. தாமரைப் பூவைத் துறந்து தன் திருமார்பிலே வந்து சேர்ந்த பிராட்டியார் 'அகலகில்லேன், அகலகில்லேன்' என்று சொல்லிக் கொண்டிருந்ததுபோல் தானும் பேரேன், பேரேன் (ஆழ்வார் திருவுள்ளத்தை விட்டுப் பேர்ந்து செல்ல மாட்டேன்) என்று சொல்லிக்கொண்டே புகுந்தான் என்கின்றார். 'திருப்பேரான் அடி சேர்ந்தமையானது அடியேனுக்கு எளிதான விதம் என்னே' என்று கூறி வியக்கின்றவர், "பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன் மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை (3) (மனை வாழ்க்கை-சம்சாரம்; மடித்தல்-திரும்புதல்; மாயை-அஞ்ஞானம்) என்று கூறி இனியராகின்றார். இங்கே ஈட்டில் ஒர் ஐதிகம். உண்ட வுடன் நூறடி நடக்க வேண்டும் என்பது சாத்திரம். இதனை அதுசரித்து எம்பெருமானார் உணவுண்டவுடன் மடத்திற் குள்ளே உலவினார். அப்போது திருமாலிருஞ் சோலைத் திருவாய்மொழியை அநுசந்தானம் செய்து கொண்டிருந்தார். 'மடித்தேன்' என்று இதற்குச் சேர மேலே போகாமல் திரும்பி யருளினார். இதனைக் கதவின் சந்து வழியாக எம்பார் கண்டு 'இப்போது இன்ன திருவாய்மொழி அநுசந்தான மன்றோ திருவுள்ளத்திலோடுகிறது' என்றாராம். "ஆம்" என்று விடை யிறுத்தாராம் எம்பெருமானார். திருப்பேர் நகர் எம்பெருமான் திருநாட்டையே தந்து விட்டான் என்ற களிப்பால், எக்களிப்பால், “எளிதாயின வாறென்று என்கண்கள் களிப்ப