பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேர் கிடக்கும் திரு நாரணன் 55 களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்" (4) (சிந்தை-நெஞ்சு, களித்தல்-பரமானந்தம் அடைதல்) என்று தன் பரமானந்தத்தை வெளியிடுகின்றார். 'என் உடம்பினுள் புகுந்து புண்ணிய பாவங்களைப் போக்கி யருளினான்' (5); என்பால் எழுந்தருளி வரும்போதே 'இருப்பேன், இருப்பேன்’ என்று செல்லிக் கொண்டே வந்தான்'; அவனுடைய அபிமானத்தைப் பெற்று அமுதம் பருகினதோ டொப்பக் களித்தேன்’ (6). அடுத்து, இக்களிப்பை அமைதியாக வெளியிடுகின்றார். 'உண்டுகளித் தேற்கு உடம்பென்குறை? மேலைத் தொண்டுஉகளித்து அந்திதொழும் சொல்லப் பெற்றேன் (7) (உம்பர்.மேலுலகம்; அந்தி தொழும் உகளித்து- அதிசயித்து; சொல்-நம: என்பது) 'இப்படிப்பட்ட அநுபவம் பெற்றுக் களிப்பதைவிட பரமபதாநுபவத்தில் என்ன சிறப்பு உள்ளது? (அதில் விருப்பம் உடையோம் அல்லோம் என்பது கருத்து) கையங்கர்ய ரசம் அதிசயித்தால் அதன் எல்லையான நிலைமையிலே செல்லக் கடவதான தொழும் சொல் நம: என்பது. இதுதான் முடிவான பேறு; இதனையும் இங்குப் பெற்றேன்' என்கின்றார். 'கண்ணுள் நின்றகலான்; கருத்தின்கண் பெரியன்; எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே' (8) (கண்ணுள் நின்று - கண்ணை விட்டு; கருத்து-மனோரதம்; எண்ணில் - சிந்திக்கப் புகுதல்) என்று பேரன்பே வடிவெடுத்தவனாய், ஏழிசையின் சுவையே உருக்கொண்டவனாய், தன்னைவிட்டு ஒரு நாளும் நீங்க மாட்டாதவனாய்த் தன்னுள் புகந்தபடியைப் பேசுகின்றார். அடுத்து, ஆழ்வார் எம்பெருமானை நோக்கி வினா வொன்று எழுப்புகின்றார்.