பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி 'இன்றென்னைப் பொருளாக்கித் தன்னைஎன்னுள் வைத்தான் அன்றென்னைப் புறம்போகப் புணர்த்த தென்செய்வான்-' (9) (இன்று-மயர்வுஅற மதி நலம் அருளப் பெற்ற பின்பு: அன்று-அவர் திருவருளைப் பெறுவதற்கு முன்பு: புறம்போகப் பண்ணுதல்-பராமுகம் செய்தல்; புணர்த்தல்-மாயையை இட்டு மயக்குதல்) என்பது வினா. இப்பாசுரம் இத்திருவாய் மொழியின் உயிரானது. இந்த வினா மூன்று வகையில் அமைகின்றது. முதல்வகை, தனக்குத்தானே சிந்தித்தலில் நோக்கு. இரண்டாம் வகை, இறைவனைக் குறித்துக் கேட்டலில் நோக்கு. மூன்றாம் வகை அதிசங்கையில்நோக்கு. இவ்விடத்தில் ஒர் இதிகாசம்: "ஆழ்வார் எம்பெருமானை நோக்கி இப்படி ஒரு வினா எழுப்பினாரே, இதற்கு எம்பெருமான் என்ன மறுமொழி கூறினான்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, அதற்குப் பட்டர், 'அவன் பதில்சொல்வதற்கு என்ன இருக்கிறது? இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டுப் பல காலம் இழந்து கிடந்த நாம் சொல்லுவது என்? என்று நாணம் உற்றவனாய்க் காலாலே தரையைக் கீறி நிற்பது தவிர வேறுண்டோ?’ என்று அருளிச் செய்தார். எம்பெருமான் கூறிய விடை நீர் பெற வேண்டிய பேற்றினைப் பெற்றிராகில் அதுவே அமையாதோ?’ என்ன, அதுவே அமையும் என்கின்றார்; தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ விடாய்த்தவன் இளநீர் குடிப்பது? பின்னர் ஆழ்வார், 'திருவாய் மொழி பாடுகையாகின்ற இக் கைங்கரியத்தைப் பரமாநந்தமாகச் செய்யப் பெற்ற எனக்கு வேறு என்ன விருப்பம் உள்ளது?’ என்கின்றார். 'உற்றேன்; உகந்து பணிசெய்து உன்பாதம் பெற்றேன், ஈதே இன்னம் வேண்டுவது?” (10) (பணி-திருவாய்மொழிபாடுகை; ஈதே-இதுவே) என்பது ஆழ்வார் திருவாக்கு. இங்ங்னம் ஆழ்வார் பாசுரங்களில் ஆழ்ங்கால் பட்ட வண்ணம் திருக்கோயிலில் நுழைகின்றோம். எம்பெருமானின் திருநாமம் அப்பக்குடத்தான் என்பது; இவன் தன்