பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேர் கிடக்கும் திரு நாரணன் 57 வலக்கையின்கீழ் ஒரு சட்டி நிறைய அப்பங்கள் வைத்திருப் பதைக் காணலாம். வக்கரன் வாய் முன் கீண்ட மாயன் என்பது திருமங்கையாழ்வார் இந்த எம்பெருமானுக்குச் சூட்டிய திருநாமம்.' எம்பெருமான் மேற்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு சயனத்திருக்கோலத்தில் (புயங்கசயனம்) சேவை சாதிக்கின்றான். இந்திராதேவி, கமலவல்லி என்பவை தாயாரின் திருநாமங்கள். இவரையும் வணங்குகின்றோம். திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார் இவர்களின் பதிகங்களை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். 'போமானை எய்து பொரும்ஆனைக் கொம்புபறித்(து) ஆம்ஆனை மேய்த்து உவந்த அம்மானைத் - தாமச் செழுந்திருப் பேரானைச் சிறுகாலைச் சிந்தித்(து) எழுந்திருப் பேற்குண்டோ இடர்' (போம் . ஒடிச்சென்ற; மான் - மாரீசன்; பொரும் - போர் செய்யும்: ஆனை - குவலயாபீடம்; ஆம் ஆனையை - பசு மந்தையை உவந்து - மகிழ்ந்து, தாமம் - இடம், மாலை; சிறுகாலை - விடியற் காலத்துக்கு ஐந்து நாழிகை முற்பட்ட நேரம்; இடர் - பிறவித் துன்பம்) என்பது பாசுரம். நாடோறும் வைகறைப்போதில் எம்பெரு மானைத் தியானித்துக் கொண்டே துயில் ஒழிந்து எழுதலால் அந்த எம்பெருமான் என்னைப் பிறவித்துயர் அணுகாதவாறு பாதுகாப்பான்’ என்கிறார் அய்யங்கார். போமானை, பொருமானை, அம்மானை என்று வந்துள்ள சொல்நயம் பாசுரத்தை மீண்டும் மிடற்றொலி கொண்டு பாடத் துண்டுகின்றது. இத்திருத்தல எம்பெருமான் அடியார் ஒருவருக்கு அவர் விரும்பிய கண்ணனின் சிறு குழந்தை விளையாட்டுகளுடன் சேவை தந்ததாக வரலாறு. யார் ஒருவர் அப்பக்குடத்தானை இத்திருத்தலத்தில் வழிபடுகின்றனரோ அவர் வீடுபேறு 15. பெரி. திரு. 5.9: 5. 16. நூற், திருப். அந்-8.