பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருத்தஞ்சை எம்பெருமான் "சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே, பாரதந்திர்ய போக்யதைகள்." என்பது ஆசாரிய ஹிருதயத்தின் ஆன்ம சொரூபத்தின் உண்மை நிலை இன்னது என்பதை எடுத்துக் காட்டும் நூற்பா ஆகும். சேஷன்-பிறனுடைய (இறைவனுடைய) பயனையே தனக்கு முக்கியமான பயனாகக் கொண்டிருப்பவன். இவனுடைய தன்மை சேஷத்வம். போக்தா அநுபவிக்கின்றவன். இவன் தன்மை போக்த்ருத்வம். போக்யதை-இனிய பொருளாக இருத்தல். பாரதந்திரன்-பிறன் ஒருவனைப் (இறைவனைப்) பிரதானமாகக் கொண்டிருப்பவன்; இவனுடைய தன்மை பாரதந்திரியம். ஆன்மாவின் உண்மை நிலையை அறியப் புகுந்தால் பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் சேஷத்வமும், பகவா னோடு கூட இன்பத்தை அநுபவிக்கின்ற போக்த்ருத்வம் ஆகிய இரண்டு தன்மைகள் விளங்குவனவாகும். சாத்திரங்களின் சாரமான திருமந்திரத்தில் உட்புக்கால் பாரதந்திரியமும், இறைவனுக்கு இனிய பொருளாக இருக்கும் தன் போக்யதையும் ஆகின்ற ஆன்ம சொரூபத்தின் உண்மை நிலை தெளிவாகும். ஆன்மாவின் தன்மை விஷயமான ஞானம் சொரூப ஞானம் என்றும், சொரூப யாதாத்மிய ஞானம் என்றும் அவை தம்முள் உள்ள ஏற்றத் தாழ்வுகளினால் இருவகைப்படும். சொரூப ஞானம் என்பது சேஷத்வ ஞானத்தையும் போக்த்ருத்வ ஞானத்தையும் கொண்டது. சொரூப யாதாத்மிய ஞானம் என்பது பாரதந்திரிய ஞானத்தையும் போக்யதா ஞானத்தையும் கொண்டது. யாதாத்மிய ஞானம்-உண்மை ஞானம். சேஷத் வத்தைக் காட்டிலும் பாரதந்திரியம் சிறந்தது. போக்த்ருவத்தைக் காட்டிலும் போக்யதை சிறந்தது என்று கூறுகின்றது மேற் காட்டிய சூத்திரம். 1. ஆசா ஹிரு -21 (புருடோத்தம நாயுடு பதிப்பு).