பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி சேஷத்வமாவது, இறைவன் தன் விருப்பின்படி செய்யும் செயல்கட்குத் தகுதியாக இருத்தல். பாரதந்திரியமாவது, இறைவன் தன் விருப்பின்படி செய்யும் செயல்கட்குப் பயன்படுதல். 'கட்டிப் பொன்போலே சேஷத்வம்; பணிப் பொன்போலே பாரதந்திரியம்’ என்று பெரியாரும் பணித்தார். 'கட்டிப் பொன்போலே" என்றது.இஸ்டிட விநியோகத்திற்குத் தகுதியாக இருத்தலைநோக்கி. பணிப் பொன்போலே’ என்றது, பணியிலே (தொழிலிலே) பயன்பட்டுக் கொண்டிருக்கிற பொன்போலே என்ற கருத்தில். போக்த்ருத்வமாவது, அறியும் தன்மையின் பயனாலே இன்ப நிலையில் விளைகின்ற சுவை களைத் தான் அநுபவிக்கின்றவனாக இருத்தல். போக்யதை யாவது, ஒரு பொருளிலுள்ள சுவை நிறம் முதலியவைகள் அநுபவிக்கின்றவனுக்கே இனியனவாக இருப்பதுபோலே ஆன்மாவில் உள்ள ஞானம் முதலியவைகளும் இறைவனுக்கே இனியனவாக இருத்தல். இவற்றை இன்னும் தெளிவுபடுத்து வோம். ஆன்மாவின் தன்மையைத் சாத்திர முகத்தாலே அறியு மளவில் இவ்வான்மா பகவானுக்கு அடிமைப்பட்டது, பகவா னுடைய அநுபவத்தை நுகர்வது' என்னும் சேஷத்வமும் போக்த் ருத்வமுமே ஆன்மாவின் சொரூபமாக (ஆன்மாவின் தன்மை யாக) விளங்கும். சாத்திரங்களின் சாரமான திருமந்திரத்தை நுணுகி ஆராய்ந்தால் பாரதந்திரியமும் போக்யதையுமாகிய ஆன்மாவின் உண்மை நிலை விளங்கா நிற்கும். இவற்றில் 'இஷ்ட விநியோகத் திற்குத் தகுதியாக இருக்கும் தன்மை' என்னும் அளவேயான சேஷத்வத்தைக் காட்டிலும் இறைவனுக்கு விருப்பப்பட்டுத் தீர்தலாகிற பாரதந்திரியம் சிறந்தது என்பதும், இன்பத்தில் 'இந்த இன்பம், நம்முடைய இன்பம்' என்று அபிமானம் உண்டா வதற்குக் காரணமான போக்த்ருத்வத்தைக் காட்டிலும் அந்த அபி மானத்தை வேர் அறுப்பதாய் போத்ருத்வத்தை இறை வனுடைய மகிழ்ச்சிக்குப் பயன்படும்படி ஆக்கிக் கொடுப்பதான போக்யதை சிறந்தது என்பது நாம் இங்கு அறியத்தக்கன. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் தஞ்சை அரசர் விடுதியிலிருந்து திருத்தஞ்சைத் திருக்கோ யிலுக்குப் புறப்படுகின்றோம். இத்திருக்கோயில் சென்னை - விழுப்புரம்-கடலூர்-திருச்சி இருப்பூர்தி பாதையில் தஞ்சை இருப்பூர்தி நிலையத்தருகில் உள்ளது. இருப்பூர்தி நிலையத்தி லிருந்து வட திசையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலை விலுள்ளது. இத்திருக்கோயில்தஞ்சை மாமணிக் கோயில்,