பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தஞ்சை எம்பெருமான் 61 தஞ்சையாளிக் கோயில், மணிக்குன்றப் பெருமாள் கோயில் என்ற மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் இரண்டு கோயில்களும் தஞ்சைக்கு வடதிசையில் விண்ணாற்றங் (வெண்ணாற்றங்) கரையிலுள்ளன; மூன்றாவது கோயில் இவற்றின் அருகிலுள்ளது. தஞ்சை இருப்பூர்தி நிலையத்தி லிருந்து குதிரை வண்டி, மாட்டுவண்டி, நகரப் பேருந்து, தஞ்சை - திருவையாறு செல்லும் பேருந்துகள் ஆகிய எல்லாவித ஊர்தி வசதிகளும் உள்ளன. நாம் நகரப் பேருந்தினைப் பயன் படுத்திக் கொள்ளுகின்றோம். இத்திருத்தலத்தை வந்தடைந்ததும் திருத்தலப்புராணம் கூறும் செய்திகள் நினைவுக்கு வருகின்றன. பூதவுடலுடன் வானுலகு ஏற முயன்ற திரிசங்குவின் வரலாற்றை நாம் அறி வோம். வசிட்ட முனிவரின் சாபத்தால் சண்டாளனாகி, விசு வாமித்திர முனிவரின் தவ வலிமையால் வானுலகு சென்ற திரிசங்கு அங்கிருந்து தள்ளப்படுகின்றான், முனிவரின் தவவலிமையால்; அந்தரத்தில் - திரிசங்கு சொர்க்கத்தில் - நிறுத்தப் பெறுகின்றான். இவன் இங்குத் தவமியற்றிக் கொண்டிருப்பதாக வரலாறு. இதனை அறிந்த காட்டில் வசிக்கும் அக்காலத்து முனிவர்கள் பராசரமுனிவரிடம் வருகின்றனர். 'பச்சை மாமலை போல் மேனியனாய், பவளவாய்க் கமலச் செங்கண்ணனாய், அச்சுதனாய், அமரர் ஏறாய்” த்திகழும் பரமாத்மாவை, நீலமுகில் வண்ணனை, இப்பிறவியிலேயே கண்டுகளிக்க வேண்டு மென்ற தங்கள் அவாவைப் பராசரமுனிவரிடம் வெளியிடு கின்றனர். பராசரருக்கும் இவ்வெண்ணம் தோன்றியது; முனிக் கணங்களுடன் பூலோக வைகுந்தமாநகருக்குத் திருத்தலப் பயணமாகக் கிளம்புகின்றார். தாங்கள் வரும் வழியிலுள்ள எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடி அங்கங்கே திருக்கோயில் கொண்டுள்ள எம்பெருமானகளை வழிபட்டுக் கொண்டு மணிமுத்தாறு நதி தீரத்திற்கு வருகின்றனர். அங்குக் குடில்அமைத்துக் கொண்டு 'வம்புலாம் சோலை மாமணி வண்ணனைக் கண்டு களித்து இன்புறுவாராயினர். பராசரமுனிவர் தம் தவவலிமையால் விண்ணுலகத்திலிருந்து அமிர்தத்தைப் பெற்று மணிமுத்தா நதி நீரில் கலக்க அதுவே 'அமிர்த சரஸ்' என்று திகழ்வதாயிற்று. இதனை விண்ணாறு என்றும் வழங்கினர் விவரம் அறிந்த மக்கள். விளக்கம் வேண்டுமா? கங்கையிற் புனிதமாய காவிரியின்