பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கிளைகளில் ஒன்றானதும், என்றும் வற்றாத சீவநதியாகத் தஞ்சைவாழ் மக்களுக்குக் கடுங்கோடையிலும் 'தண்' என்றிருக்கும் நீரை வாரி வழங்கி வருகின்றதுமான நதியே விண்ணாறு. இதன் கரையில் பூலோக வைகுந்தமாகத் திகழ்வது 'தஞ்சை மாமணிக் கோயில், 'விண்' என்றால் வானம். வானத்தில்திகழும் வைகுந்த மாநகரின் எல்லையில் பெருகி ஓடும் விரஜை என்னும் நதியை விண்ணாறு’ என்று சாத்திரங்கள் சாற்றுக்கின்றன. அந்த விண்ணாற்றைக் கடந்தால் வைகுந்த மாமணிக் கோயிலை' அடைவோம் என்று நான்மறைகள் நவில்கின்றன. 'பூலோக விரஜை' என்ற இந்த 'விண் ணாற்றைக் கடந்தால் செளந்தர்ய விமான நிழலில் தஞ்சை மாமணிக் கோயிலை’க் காண்பது நம் கண் காணும் உண்மை. பராசர முனிவர் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி முனிவர்கள் அனைவரும் நாடோறும் மணிமுத்தா நதியில் (விண்ணாற்றில்) நீராடியும், திருமந்திரத்தின் பெருமைக்குக் காரணனான நீலமேகனைக் கண்டுகளித்தும் இன்புற்று வரும் நாளில் சால்மலித்வீப வாசிகளான தஞ்சகன், தண்டகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகத் தஞ்சை மாமணிக் கோயிலின் பெருமையையும் அப்பகுதியின் வளப்பத்தையும் கேள்வியுற்று அமைதி நிலவும் மணிமுத்தா நதி தீரத்திற்கு வருகின்றனர். அங்கு வாழும் முனிவர் கட்கு இடையூறு விளைவிக்கின்றனர். பராசர முனிவர் அத் தீயவர்களை அடக்க எண்ணுகின்றார். நான்முகனை நோக்கித் தவமியற்றுகின்றார். நான்முகனும் முனிவர்முன் தோன்றித் தம்மால் அசுரர்களை அடக்க முடியாதென்றும், உருத்திரனை நோக்கித் தவமியற்றுமாறும் பணித்து மறைகின்றார். அங்ங்னமே முனிவர் தவம் இயற்ற, உருத்திரன் அவர் முன் தோன்றி அவ்வரக்கர்களை அழிக்கத் தன்னால் இயலாது என்றும், தேவகி வயிற்றில் தோன்றிக் கம்சனை அச்சுறுத்திய காளிதேவியை அனுப்புவதாக் கூறி மறைகின்றார். பிறை சூடிய பிஞ்ளுகனின் ஆணை பெற்றுக் காளிதேவியும் கத்தி, கேடயம், கோடரி போன்ற ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் தோன்றி அசுரர்களுடன் போரிடத் தொடங்குகின்றனள். தண்டகனும் தாரகனும் கொல்லப் பெறுகின்றனர். உருத்திரனிடமிருந்து வரம் பெற்ற தஞ்சகன் தலைமறைவாகின்றான். காளிதேவியும் 'கோடியம்மன்’