பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தஞ்சை எம்பெருமான் 63 எனப்பெயர் பெற்றுத் தஞ்சையின் வடபால் தெய்வமாகத் தங்கிவிடுகின்றாள்; இன்றும் இவள் மக்களின் வழிபாட்டுக் குரியவளாகத் திகழ்கின்றாள். தஞ்சகன் தன் உடன் பிறப்பாளர்கள் காளிதேவியால் கொல்லப் பெற்றனர் என்பதை அறிந்து மிகுந்த சினம் அடை கின்றான். தேவர்கட்கும் முனிவர்கட்கும் எண்ணற்ற இடையூறு களை விளைவித்து வருகின்றான். நலிவுற்ற அமரர்களும் முனிவர் களும் பராசரரை முன்னிட்டுத் திருமாலை வேண்டுகின்றனர். எம்பெருமானும் மீண்டும் ஒருமுறை நரசிங்கனாகத் தோன்றி தஞ்சகாசுரனை வதம் செய்து விடுகின்றார். இது புராண வரலாறு. இத்திருக்கோயில் எம்பெருமான்களை பூதத்தாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களா சாசனம் செய்துள்ளனர். "மாயோனை வாள்வலியால்மந்திரங்கொள் மங்கையர் கோன்' திருமந்திரத்தின் பெருமையைப் பேசுங்கால், எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம், எனக்குஅரசு, என்னுடைய வாழ்நாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி, அவர்உயிர் செகுத்தளம் அண்ணல், வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள்! உய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் " (செகுத்த - அழித்த, அண்ணல் - பெருமை பொருந்தியவன்; வம்பு - மணம்; உய்ய கடைத்தேற) என்ற பாசுரத்தில் முதலாவதான தஞ்சை மாமணிக்கோயிலைக் குறிப்படுவர். 'எனக்கு உபகாரம் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லாவித உறவு முறையும், பகைவர்களை அழித்து என்னை ஆண்டவனும், என்னுடைய உயிர்க்கு உயிரானவனும், அம்பு மழையால் அரக்கர்களைக் கிழங் கெடுத்தவனுமான பெருமை பொருந்திய எம்பெருமான் எழுந்தருளியிருகின்ற பரம போக்யமான தஞ்சை மாமணிக் கோயிலைத் தொழுது எல்லாவித உறவினனும் அவனே' என்பதன் பொருளுக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் 3. பெரி. திரு. 1.1:6.