பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி பெற்றேன்' என்கின்றார். இந்த உணர்வுடன் எம்பெருமான் சந்நிதியை அடைகின்றோம். எம்பெருமானின் திருநாமம் நீலமேகப் பெருமாள்; இருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் உபய நாச்சியமாருடன் பெரிய திருஉருவுடன் சேவை சாதிக்கின்றார். அவரை வணங்கு கின்றோம். பராசர முனிவர் கூப்பிய கையுடன் எம்பெருமான் அருகில் நின்று கொண்டிருப்பதைக் காண்கின்றோம். உற்சவ மூர்த்தியும் கையில்செங்கோலுடன் காட்சி தருகின்றார். திரு மங்கை மன்னனின் மேற்குறிப்பட்ட பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். கருவறையின் உட்புறத்தில் வடகிழக்கு மூலையில் நாச்சியாருடன் கல்யாண வேங்க டேசனும் அபயகரத்துடன் வரதராசனும் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருவதையும் காண்கின்றோம். கருவறையின் வெளியில் வந்து, வலது தொடையில் இலக்குமியைத் தாங்கிய வண்ணம் காட்சி தரும் நரசிம்மனையும், ஆண்டாளையும், விஸ்வக்சேனரையும் சேவிக்கின்றோம். கையில் கமண்டலத்தைத் தாங்கிய வண்ணம் வராக முகத்துடன் காணப்பெறும் சிலை யாருடையது என்பது தெரியவில்லை. பெரிய பிராகாரத்தின் தென்புறத்தில் செங்கமலவல்லித் தாயார் சந்நிதி உள்ளது. அருள்வெள்ளம் பெருக்கெடுத்தோடும் அன்னையின் திருமேனியை நாள் முழுதும் கண்களாரக்களித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். சந்நிதியில் ஒரு கம்பத்தின் ஒரு பக்கம் யோக நரசிம்மரும், மற்றொரு பக்கம் ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். இவர்களிருவரையும் நாடோறும் 108 முறை வலம் வந்தால் தமக்கு ஏற்பட்ட, ஏற்படும் இன்னல்கள் யாவும் 'தீயினில்துசாகும்' என்ற நம்பிக்கை இப்பக்கத்து மகளிரிடம் இருந்து வருகின்றது. தாயார் சந்நிதியை விட்டு வலப்புறமாக வலம் வருங்கால் வடகிழக்கு மூலையில் தேசிகன் சந்நிதியைக் காணலாம். இதனை இவர் மகன் நயினாராச்சாரியார் பிரதிட்டை செய்தனர் என்று சொல்லப் பெறுகின்றது. இதுவும் இவ்வூரின் சிறப்புக்கு ஒரு காரணமாகும். பராசரமுனிவருக்கு காட்சி தந்த இடமாதல்பற்றி இவ்வூர் 'பராசர சேஷத்திரம்” என்றும் வழங்கப் பெறுகின்றது. அடுத்து, அருகிலிருக்கும் தஞ்சையாளிக் கோயிலை அடைகின்றோம். திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்