பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தஞ்சை எம்பெருமான் 65 செய்யும்போது இடையிலே 'தஞ்சையாளி'யையும் நினைக்கின்றார் ஆழ்வார். என்செய் கேன்அடியேன்உரை யீர்.இதற்கு என்று என்மனத் தேயிருக் கும்புகழ், தஞ்சை ஆளியைப் பொன்பெய ரோன்நெஞ்சம் அன்றி டந்தவ னைத்த ழலேபுரை மின்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் சூழ்க டல்சிறை வைத்திமை யோர்தொழும், பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை அன்றி என்மனம் போற்றிஎன் னாதே." (என்றும்-எக்காலமும்; புகழ்-கீர்த்தியை யுடையவன்; ஆளியை - ஆள்பவனை; பொன் பெயரோன் - இரணியன்; இடத்தல் - பிளத்தல்; தழல் - நெருப்பு: மின்செய்-ஒளி விடும்; சிறைவைத்து-அணைகட்டி; மால்வரை-பெரியமலை போன்றவன்; போற்றி-மங்களாசாசனம்) என்பது பாசுரம். 'எப்போதும் என் இதயத்தை விட்டுப் பிரியாமையால் வந்த புகழையுடையவனாய், தஞ்சை மாமணிக் கோயிலிலே எழுந்தருளியிருப்பவனாய், பிரகலாதன் பொருட்டு இரணியனின் மார்பைப் பிளந்தொழித்தவனாய், இராவணனின் இருப்பிடமான இலங்கையைச் சுடுகாடாக்குவதற்குக் கடலிலே அணை கட்டி எழுந்தருளினவனாய், இப்படிப்பட்ட வியத்தகு செயல்கட்குத் தோற்றுத் தேவர்களால் வணங்கப் பெறுபவ னாய், அப்படி வணங்கப் பெறுதலால் ஒளி பெற்ற வடிவை யுடையவனான எம்பெருமானையன்றி மற்றொருவரை என் மனம் வாழ்த்த விரும்பாது” என்கிறார் ஆழ்வார். தன்னுடைய பாரதந்திரியத்தைப் பேசுகின்றார். இந்தப் பாசுரத்தை மிடற்றொலி கொண்டு சேவித்த வண்ணம் தஞ்சையாளிக் கோயிலில் நுழைகின்றோம். இங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானின் திருநாமம் நரசிம்மன்; இரணியனைக் கொன்ற நிலையில் காட்சித் தருகின்றார். தஞ்சகாசுரனை வதம் செய்த பெருமானல்லவா இவர்? கிழக்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தாயார், தஞ்சைநாயகி, இருவரையும் சேவித்து மீண்டும் பாட்டை இசைத்த வண்ணம் வெளி வருகின்றோம். இத்திருக்கோயிலை அடுத்துள்ள மணிக்குன்றப் பெரு மாள் சந்நிதிக்குப் போகின்றோம். மேல் குறிப்பிட்ட பாசுரத்தில் 4. பெரி. திரு. 7.3:9. சுப்பு - 6