பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி வரும் ‘மணிக்குன்றினை என்ற தொடர் இந்தத் திருக்கோயில் எம்பெருமானைக் குறிக்கின்றது போலும். இதனால்தான் இந்த மூன்றாவது கோயில் எம்பெருமான் 'மணிக்குன்றப் பெருமாள்' என்ற திருநாமம் பெற்றனரோ என்று நினைக்கத் தோன்று கின்றது. தாயார், அம்புயவல்லி; இந்த எம்பெருமானும் இருந்த திருக்கோலத்தில் கிழக்கே திருமுகமண்டலங்கொண்டு சேவை சாதிக்கின்றார். இருவரையும் வணங்கி விடைபெறுகின்றோம், பாசுரத்தை மீண்டும் ஒருமுறை சேவித்த வண்ணம். இந்த மூன்று திருக்கோயிலிலும் உள்ள உற்சவர் சீமன் நாராயணன் என்ற திருநாமத்தால் வழங்கப்பெறுகின்றார். தஞ்சைமாமணிக் கோயில் எம்பெருமானைப் பல அர்ச்சாவதார மூாத்திகளைக் குறிப்பிடும்போக்கில் மங்களாசாசனம் செய் கின்றார் பூதத் தாழ்வார். தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளும்தண்பொருப்புவேலை-தமருள்ளும் மாமல்லை கோவல் மதிள்குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்’ (தமர்-பக்தர்; தண் பொருப்பு-அழகியமலை; வேலை. திருப்பாற்கடல்; ஏவல்ல எதிரிகளை முடிக்கவல்ல) என்பது இவர் பாசுரம். அன்பருடைய நெஞ்சம், தஞ்சை மாமணிக் கோயில், திருவரங்கம் பெரிய கோயில், திருத்தண் கால், திருவேங்கடம், திருப்பாற்கடல், திருக்கடல் மல்லை, திருக்கோவலூர், திருக்குடந்தை என்னுமிடங்களை இதில் மங்களா சாசனம் செய்துள்ளமையைக் காணலாம். தமருள்ளம் சிறந்தமையால்அது முதலில் நுவலப்பெற்றது. இந்தப் பாசுரம் மூன்று திருக்கோயில்கட்கும் பொருந்தும். இந்த நிலையில் திவ்வியகவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் இச்சந்நிதியில் ஓதி உளங்கரைகின்றோம். ஒதக்கேள் என்நெஞ்சே உனக்கும்இது நன்(று) எனக்கும் மேதக்க நன்மைஇனி வேறுஇல்லை-போதப் பெருந்தஞ்சை மாமணியைப் பேணி வடிவம் பொருந்தஞ்சை மாமணியைப் போற்று." 5. இரண். திருவந்-70 6. நூற். திருப். அந்-3