பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தஞ்சை எம்பெருமான் 67 (ஓத சொல்வதை மேதக்க - மிக்க நன்மையைத் தரவல்ல ; மாமணி - மாணிக்கம் போன்ற இறைவன் போத - நன்றாக, பேணி - விரும்பித் துதித்து; வடிவம்-திருமேனி, பொருந்து - பொருந்திய அஞ்சை - பஞ்சாயுதங் களையும்; மா - இலக்குமி, மணி - கெளஸ்துப ரத்நம்: போற்று - வாழ்த்துவாயாக) என்பது பாசுரம். தஞ்சைமாமணி என்பது இத்தலத்து எம்பெருமானின் திருநாமம். 'தஞ்சை மாமணியையும் அவனது திவ்விய ஆயுதங்களையும் கெளஸ்த்துப ரத்தினத்தையும் போற்றினால் சம்சாரத்தில்அழுந்தியுள்ள உனக்கும் அதனால் உண்டான மாசு ஒழிய எனக்கும் நற்பேறு வாய்க்கும்” என்று தன் நெஞ்சை நோக்கித் தெருட்டுகின்றார் அய்யங்கார். தஞ்சகாசுரனை எம்பெருமான் வதைத்த தலமாதல்பற்றிஇத் திருத்தலம் தஞ்சை என்று திரு நாமம் பெற்றதாகக் கூறுவர். கடந்த பலஆண்டுக் காலமாக தஞ்சை மாமணிக் கோயிலின் உற்சவமூர்த்தியான நீலமேகப் பெருமானுக்குப் பீடத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டு அதனால் உற்சவங்கள் கண்டறிய முடியாத நிலை இருந்து வந்தது. அண்மையில் பொது மக்கள் தம் நன்கொடையால் ரூ. 20,000 செலவில் இக்குறையை நீக்கினர். மேலும், இத் திருக்கோயிலின் திருமடப்பள்ளி, தாயார் சந்நிதி, திருச்சுற்று முதலான இடங்களிலும் உள்ள குறைகளை நீக்கத் திருப்பணி மேற்கொள்ளப் பெற்று நிறைவு பெற்றது. 1-6-80 இல் நீலமேகப் பெருமாள் கருடன்மீது இவர்ந்து தஞ்சை இராஜ வீதி நான்கிலும் வலம் வந்து மக்களுக்குக் காட்சி தந்தார். இந்த உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் செய்திகளைஅறிந்த வண்ணம் மன நிறைவுடன் கண்டியூர் என்னும் திருத்தலத்தை நோக்கிப் பயணமாகின்றோம். 紫党 紫