பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கண்டியூர் கமலநாதன் 'நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே, குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக' எம்பெருமான் அருள் நிறைந்த திருவுள்ளத்தன். எனினும், சேதநன் செய்யும் அளவு கடந்து குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச்சீற்றத்தை மாற்றிக் கொண்டு இவனு டைய குற்றங்களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவே ஆகும் என்பது இந்த நுாற்பாவின் பொருளாகும். பகவான் ஏன் பிராட்டியாருக்காக இவனுடைய குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும்? இதனை உரையாடல் மூலம் தெளிவுபடுத்தலாம். சேதநன் எம்பெருமானிடம் ருசி பிறந்து இவனை உபாயமாகப் பற்றும்போது, ஈசுவரன் சினங் கொண்டு 'என் முன் நில்லாதே’ எனச் சீறி விழுகின்றான். இதை நோக்கிய பிராட்டி யார், எல்லாம் அறிந்தவராயிருப்பினும், ஒன்றும் தெரியாதவர் போன்று ஈதென்ன?’ என்கின்றார். பகவான். இவன் செய்த குற்றங்களுக்கோ அளவில்லை. பொறுத்தற்கு அரிய பல பிழைகளை இழைத்துள்ளான். பிராட்டி: பெருமானே, தாங்கள் இவன் புரிந்த அபராதங்களைக் கணக்கிட்டு இவனை இங்ங்ணம் தள்ளிக் கதவடைத்தால், இவனுக்கு வேறொரு புகலிடம் உண்டோ? இவனுக்கும் தங்கட்கும் உள்ள தொடர்பை நோக்கினால் 'உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது' என்கிறபடி எக் காரணத்தாலும் நீங்காத தொன்றன்றோ? இம்முறையில் தாங்கள் இவனைக் கைவிட முடியுமா? 1, முமுட்சுப் படி-127 2. பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை. ஆதலின் இவன் குற்றங்களுக்கேற்ப இவனைத் தண்டித்தே ஆக வேண்டும்.