பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டியூர் கமலநாதன் 69 பக: இதைக் கருதிஇவன் எத்தனைத் தீங்குகள் புரியினும், யான் இவனை அங்கீகரிக்க வேண்டுமா, என்ன? அவ்வாறு செய்ய வேண்டும் என்னும் இன்றியமையாமை தான் என்ன? பிராட்டி இவனைப் பெறுதல், உரியவரான தங்கட்குத் தானே பேறாய் உள்ளது. தாங்கள் இன்னும் உறுதியுடன் இருப்பின், இவ்வுலகில் ஒருவனேனும் தங்கட்குக் கிடைப் பனோ? உயிர்களைத் திருத்தி பெறுதற் பொருட்டே பலவற்றை அவதாரங்களையும் எடுத்து உழலும் தங்கட்கு யான் அறிவுறுத்தல் வேண்டுமா? தங்களை இரட்சகப் பொருளாக நாடி வந்த இவனைக் காக்கவில்லையேல் தங்களுடைய சர்வ இரட்கசத் தன்மைக்குக் குறைவு ஏற்படாதா? பக: அநாதி காலமாய் நம்முடைய கட்டளையை அவமதித்து, தன் இச்சையின்படி ஒழுகிப் போந்த இவனைக் குற்றங்கட்கேட்பத் தண்டியாமல் ஏற்றுக்கொள்ளின் நாம் ஏற்படுத்திய சாத்திரத்தின் மதிப்பும் மரியாதையும் குன்றாதோ? பிராட்டி: ஆம்; அஃதுண்மையே. ஆயினும், தங்களை நாடிவந்தஇவனைக் காக்காமல், இவனது குற்றங்களையே நோக்கித் தண்டிக்கில் தங்களுடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு? அதற்குப் பயன்தான் என்ன? இவனைப் பாவங் களினின்றும் நீக்கி இரட்சித்தாலல்லவா, அதற்குப் பயன் ஏற்படும். பக: இவனைத் தண்டிக்கவில்லையேல் சாத்திரம் நிலையாது. இவனைக் காக்க வில்லையேல், அருட்குணம் நிலைத்திராது. இந்த இக்கட்டான நிலைமையை எங்ங்னம் சமாளிப்பது? பிராட்டி: இதற்காகவா சிந்திக்கின்றீர்கள்? தங்களைச் சிறிதும் நோக்கிப் பாராது தன்னிச்சையில் செல்பவனிடம் சாத்திர முறையைப் பயன்படுத்துங்கள்; தங்களிடம் அன்புடன் அண்டி வந்த இவனைப் பாவங்களினின்றும் நீக்கி இரட்சியுங்கள். இங்ங்ணம் செய்வதால் சாத்திரமும் பழுது படாது; தங்களது அருட்குணமும் உயிர் பெற்றுத் துலங்கித் திகழும். இங்ங்னம் எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து, அவன் சினத்தை மாற்றி, அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு செய்பவர் பிராட்டியாரே யாவர். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ்சம் நெகிழ