பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி வில்லையேல், பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேதநனை அங்கீகரிக்கமாறு செய்வர். ஆதலின், சேதநனுக்குப் பிராட்டியாரின புருஷகாரம் (தகவுரை கூறுதல்) இன்றியமையாததென்றும், பகவான் சேதநனுடைய குற்றங்களைப் பிராட்டியாருக்காகவே பொறுக்கின்றான் என்றும் அறிதல்வேண்டும். ஈண்டு, "உபதேசத் தாலே மீளாத போது சேதநனை அருளாலே திருத்தும்; ஈசுவரனை அழகாலே திருத்தும" என்ற பெரியாரின் வாக்கும் நோக்கத் தக்கது. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்டவண்ணம் தஞ்சைமாமணிக் கோயிலினின்றும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்திற்கு ஏகுகின்றோம். இத்திருத்தலம் தஞ்சை இருப் பூர்தி நிலையத்தினின்று தஞ்சை- திருவையாறு சாலையில் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. தஞ்சை மாமணிக் கோயில் இச்சாலையிலேயே இருப்பதால் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று திருக் கண்டியூரில் இறங்குகின்றோம். சுமார் நூறு மீட்டர் தொலைவிற் குள்ளேயே அருகருகே திருமால், நான்முகன், சிவன் இவர் களுக்கு மூன்று திருக்கோயில்கள் தனித்தனியே உள்ளன. இத் திருத்தலத்தின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் எட்டு இயல் களில் பரக்கப் பேசப் பெறுகின்றது. கபால தீர்த்தம் திருமால் திருக்கோயிலுக்கு மேற்புறத்திலும், பத்ம தீர்த்தம் திருக்கோ யிலுக்கு முன் புறமாகவும் அமைந்துள்ளன. பத்ம தீர்த்தம், பலி தீர்த்தம் என்றும் வழங்கப் பெறுகின்றது. அருகில் காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஓடுகின்றது. தஞ்சை - திருவையாறு நெடுஞ்சாலையில் திருக்கோயில் கிழக்கு நோக்கிய வண்ணம் சாலையை நோக்கியவாறு அமைந்துள்ளது. திருக்கோயிலின் இராசகோபுரம் மூன்று தளங்களால் ஆனது. இங்குச் சக்கரத்தாழ்வாருக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. சக்கரத்தின் மறுபுறம் இலக்குமி நரசிம்மனின் திருமேனி அமைந்துள்ளது. மூன்று புறமுள்ள சுவர்கள் மிகவும் நெருங்கியிருப்பதால் இலக்குமி நரசிம்மர் கண்கட்குத் தென்படுவதில்லை. வலம் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. 3. நீ வசபூஷ - 14 (புருடோத்தம நாயுடுபதிப்பு)