பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டியூர் கமலநாதன் 71 சக்கரத் தாழ்வாரும் இலக்குமி நரசிம்மனும் சிறந்த வரப் பிரசாதிகள். திருக்கோயிலின் விமானம் திறந்துள்ள தாமரை மலர் போல் உள்ளது. இது கமலகிரீதி விமானம் என்று வழங்கப் பெறுகின்றது. இவற்றையெல்லாம் பார்த்த வண்ணம் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் கமல நாதனை வணங்குகின்றோம். தயாரின் திருநாமம் கமலவல்லி நாச்சியார். இவரையும் சேவிக்கின்றோம். உற்சவர் அரன் சாப விமோசனப் பெருமாள் என்ற திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். இவரைத் தவிர சந்தான கோபாலன், நவநீத கிருஷ்ணன் என்ற வேறு இரண்டு உற்சவர்களும் உள்ளனர். இந்தத் திருக்கோயிலில் கமல கூேடித்திரம், கமலப் புஷ்கரிணி, கமல விமானம், கமல நாதன், கமல வல்லி என்ற ஐந்து கமலங்கள் உள்ளன. இவை திருச்சேறை திருத்தலத்தை நினைவுகூரச்செய்கின்றன. இத்திருக்கோயில் 222 அடி நீளமும், 115 அடி அகலமும் உடையது. தென் புறத்திலுள்ள தேசிகன் கோயில் சிறியது, இவருக்கு உற்சவர் இலர். இத்திருத்தலத்தை, 108 - இல் 86 திருத்தலங்களைச் சேவித்த திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களா சாசனம் செய்துள்ளர். பிண்டிஆர் மண்டை ஏந்தி பிறர்மனை திரிதந்து உண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன்ஊர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே." (பிண்டி - உளுத்த பொடிகள்; திரிதந்து-திரிந்து; முண்டியான் - மொட்டை யாண்டி, ஒருவன் - ஒப்பற்றவன்) என்பது பாசுரம். இதனை இத்திருத்தலத்தில் ஒதுகின்றோம். 'எம்பெருமான் இதில் உகந்தருளின கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருவெஃகா, திருப்பேர்நகர், திருக்கடன் மல்லை 4. திருக்குறுந் - 19.