பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி ஆகிய திருப்பதிகளிலெங்கும், 'பதியே பரவித் தொழும் தொண்டர்' என்னும்படியாக மூழ்கியிருப்பவர்கள் உய்ய வழி உண்டேயல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உய்ய வழி இல்லை” என்கிறார் ஆழவார். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினை விற்கு வர, அதனையும் ஓதி உளங் கரைகின்றோம். பேசவரின் தென்அரங்கன் பேரெல்லாம் பசுகவாய்; கேசவனைக் காண்கவிழி; கேட்கசெவி - ஈசனார் உண்டியூர்தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான் கண்டியூர் கூப்புகளின் கை." (பேசவரின். பேசத் தொடங்கினால், விழி - கண்கள்; செவி - காது; ஈசனார் - சிவ பெருமான்; இரவாமல் - யாசிக்க வொட்டாமல்; தவிர்த்தான் - நீக்கியருளியவனுடைய, கூப்புக - அஞ்சலி செய்க) என்பது பாசுரம். எம்பெருமான் வாய் முதலிய உறுப்புகளை அளித்து மாநுடர்களைப் பிறப்பித்ததன் காரணம் எல்லா வகையாலும் இவர்கள் தன்னையடைந்து வழிபட்டு நற்கதி பெறும்பொருட்டேயாதலால், அப்பெருமானது திருநாமங் களைச் சொல்லித் துதிக்குமாறு வாயையும், அவனது திருவுருவத் தைச் சேவிக்குமாறு கண்களையும், அவனது புகழைக் கேட்கு மாறு செவிகளையும், அவனது திருத்தலங்களைக் கூப்பித்தொழு மாறு கைகளையும் வேண்டுகின்றார் அய்யங்கார். இவரே திருவரங்கக்கலம்பகத்திலும், கேசவனை யேசெவிகள் கேட்க, திருவரங்கத்(து) ஈசனையே சென்னி இறைஞ்சிடுக; - நேசமுடன் கண்ணனையே காண்க; இரு கண்ணினர்கொள் காயாம்பூ வண்ணனையே வாழ்த்துகஎன் வாய்." (சென்னி-முடி; இறைஞ்சிடுக-வணங்கிடுக; நேசம்-பக்தி; இணர்கொள்கொத்தாக மலர்ந்த) என்று பாசுரம் இட்டுள்ளர். இந்த இரண்டு பாசுரங்களும், வாழ்த்துகவாய்; காண்க.கண்; கேட்கசெவி, மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் - சூழ்ந்த 5. நுாற். திருப். அந். 15. 6. திருவரங். கலம் -20