பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டியூர் கமலநாதன் 73 துழாய்மன்னு நீள்முடிஎன் தொல்லைமால் தன்னை வழாவண்கை கூப்பி, மதித்து.' (மகுடம்-தலை; மன்னு-பொருந்தியிருக்கப் பெற்ற) என்ற திருமழிசையாரின் பாசுரத்தை அடியொற்றி அமைந்தவை யாகும். சிவனது சாபத்தைக் கண்டனம் செய்தது போலச் சேவை சாதித்த இடமாதலால் இத்திருத்தலம் திருக்கண்டியூர் என்று திருநாமம் பெற்றது. இதனை வட மொழியில் கண்டந புரம் என்று வழங்குவர். நான்முகனுக்குரிய திருக்கோயில் திருமால் திருக் கோயிலுக்கு வடபால் உள்ளது. இதன் இராசகோபுரமும் மூன்று தளங்களைக் கொண்டது. இதுவும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இது பெரிய திருக்கோயிலாகத் திகழ்ந்திருத்தல் வேண்டும். இப்பொழுது சிதிலமடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. நான்முகன் திருமேனி இருந்த இடத்தில் சிவலிங்கம் நிறுவப் பெற்றுள்ளது. நான்முகன், நாமகள் இவர்களின் மூலவர்கள் சிவன் கோயிலில் ஒரு சிறு கோயிலில் உள்ளனர். இவர்கட்கு உற்சவர்கள் இலர். கண்டியூர், திரிமூர்த்தி கூேடித்திரம் என்றும் வழங்கப் பெறுகின்றது. இது உத்தமர் கோயிலை நினைக்கச் செய்கின்றது. கண்டியூரின் வட மேற்கு திசையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பெரும்புலியூரும், வடகிழக்குத் திசையில் கூடலுார் என்ற திருத்தலமும் உள்ளன. இச் செய்திகளை அறிந்த வண்ணம் மன நிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 7. நான். திருவந் - 11.