பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடந்தை ஆராவமுதன் 75 வரும் 'குருகூர்ச் சடகோபன்' என்ற மற்றொரு தொடரைக் கொண்டு இவை சடகோபன் திருவவதரித்த இப்போது ஆழ்வார் திருநகரி என வழங்கப் பெறும் திருக்குருகூரில் இருத்தல் கூடும் எனக் கருதி அவ்வூருக்குப் புறப்படுகின்றார். & திருக்குருகூரை அடைந்தவர் அங்குத் திருக்கோயில் கொண்டிருக்கும் பொலிந்து நின்ற பிரானையும் திருப்புளியாழ் வாரையும் சேவித்து அப்பகுதியிலுள்ள சிலரை இப்பிர பந்ததைப்பற்றி உசாவுகின்றனர். அவர்கள் நம்மாழ்வாரின் திருவடி சம்பந்தம் பெற்ற மதுரகவிகளின் மரபில் வந்த பராங்கு தாசரை வினவினால் இதுபற்றிய விவரம் தெரியக்கூடும் எனக் கூறி அவர்தம் இருப்பிடத்தையும் தெரிவிக்கின்றனர். அப்பராங்கு சதாசரிடம் வருகின்றார் நாதமுனிகள்; முனிகள் அவரை வினவ, அவர் பதினொரு பாசுரங்களைக் கொண்ட 'கண்ணிநுண் சிறுத் தாம்பு’ என்ற பிரபந்ததைப் பன்னிராயிரம் முறை ஒன்றிய மனத்துடன் நம்மாழ்வார் திருமுன் உருப்போடுகிறவர்கட்கு ஆழ்வார் தோன்றியருள்வார் என்று உரைத்தருளுகின்றார். இங்ங்னமே முனிகளும் செய்ய, ஆழ்வார் அவர்முன் தோன்றித் தாம் அருளிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இந்த நான்கு பிரபந்தங்களையும் ஏனைய ஆழ்வார்கள் பாடியருளிய வற்றையும் திருமந்திரத்தையும் அட்டாங்க யோகத்தின் நுட்பங்களையும் கூறியருளுகின்றார். பின்னர் தம் பதி திரும்பி, வேத வியாசர் திருமறைகளை நான்காக வகுத்தாற் போல, இப்பாசுரங்களை முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என்ற நான்கு பகுதிகளாக வகுக்கின்றார். தம்முடைய மருமக்களாகிய மேலையகத்தார், கீழையகத்தார் என்பவர்களைக் கொண்டு பண்முறைகளையும் அமைகின்றார். இந்த நான்கு தொகுதிகளும் ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ என்ற பெயரில் நம்மிடையே வழங்கி வருகின்றன. இந்தச் சிந்தனைகள் நம் மனத்தில் அலை பாய சார்ங்க பாணித் திருக்கோயிலை நோக்கிப் புறப்படுகின்றோம். இத்திருக் கோயில் ஊருக்கு நடுவே நடுநாயகம்போல் அமைந்துள்ளது. 2. வைணவர்கள் நம்மாழ்வார் தங்கியிருந்த புளிய மரத்தையும் ஆழ்வார் என வழங்குதல் மரபு. 3. மதுரகவிகள் நம்மாழ்வார்மீது பாடிய ஒரு சிறு பிரபந்தம்.