பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி இத் திருக்கோயில் கும்பகோணத்திலுள்ள எல்லாக் கோயில் களையும் விடப் பெரியது. கோபுரமும் அப்படியே மிகப் பெரியதாக அமைந்துள்ளது. பதினோரு மாடங்களைக் கொண்டது. பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ஒர் இரதம்போல் அமைக்கப்பெற்றுள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் இருக்கின்றன. இதனை நோக்கிய திருமங்கையாழ் வாரும் இத்திருக்கோயில் எம்பெருமானைப் பற்றி மங்களா சாசனம் செய்துள்ள 'திருஎழுக் கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை இரதபந்தம்’ என்ற சித்திர கவியாக அமைத்தனர் போலும். இது சரணாகதித் தத்துவத்தை விளக்கும் பாசுரமாகும். இத்திருக்கோயில் அமைப்பையும் இதன் பின்புறமுள்ள திருக்குளத்தையும் பார்க்கும் நாம் புராணகாலத்திற்கு இழுத்துச் செல்லப் பெறுகின்றோம். பிருகு முனிவர் ஒரு சமயம் வைகுந்தம் வருகின்றார் பரந்தாமனைச் சேவிப்பதற்கு. பரந்தாமன் ஏதோ காரணத்தினால் முனிவரைக் கவனியாது பாராமுகமாக இருக்கின்றார். இதனால் சினங்கொண்ட முனிவர் பரந்தாமனின் திருமார்பில் எட்டி உதைக்கின்றார். பராந்தாமனோ சிறிதும் கவலாது முனிவரின் திருப்பாதங்களைத் தொட்டு அவரைச் சேவிக்கின்றார். அவன் மார்பில் இருக்கும் இலக்குமிக்கு எம்பெருமானின் இச்செயல் சிறிதும் பிடிக்கவில்லை. சினங் கொள்ளுகின்றார். அகிலகில்லேன் இறையும்' என்று அவன் திருமார்பில் உறைவள் அல்லவா? நேராக உதை வாங்கியவள் சும்மா இருப்பாரா? இதனால் பிணங்கிக் கொண்டு வைகுந்தத்தை விட்டு இப்பூவுலகிற்கு வருகின்றார்; வந்தவர் கொல்லபுரம் என்ற இடத்தில் தங்கி விடுகின்றார். பெரிய பிராட்டியாரைத் தேடிக் கொண்டு பூவுலகிற்கு வருகின்றார் பரமபத நாதன். வந்தவர் பதுமாவதியைத் திருமணம் புரிந்து கொண்டு திருப்பதியில் சீநிவாசனாகத் தங்கிவிடுகின்றார். இந்நிகழ்ச்சியை நாரதர் மூலம் கேள்வியுற்ற இலக்குமிதேவிக்கு மேலும் சினம் மிகுகின்றது: அவரைத் தண்டிக்க வேண்டு மென்று திருப்பதிக்கு விரைகின்றார். நாரதரின் யோசனைப்படி அச்சங்கொண்ட சீநிவாசன் குடந்தை வந்து அங்கு ஒரு பிலத்தினுள் நுழைந்து கொள்ளுகின்றார்." சீநிவாசனைத் தேடிக் கொண்டு குடந்தை வருகின்றார் இலக்குமி. 4.திருவாய்.1.10:10 5.இதனை நினைவு படுத்தும் முறையில் இத்திருக் கோயிலில் பாதாள சீநிவாச சந்நிதி அமைந்துள்ளது.