பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடந்தை ஆராவமுதன் 77 சீநிவாசன் அகப்படவில்லை. நீர் வளமும் நிலவளமும் இயற்கை எழிலும் நிறைந்த குடந்தை இவர் மனத்தைத் கவர்கின்றது; சினமும் தணிகின்றது. இத்திருத்தலத்தின் எம்பெருமானுடன் இணைந்து வாழ நினைக்கின்றார். திருக்கோயிலருகிலுள்ள திருக்குளத்திலுள்ள பொற்றாமரையில் பால கோமள வல்லியாக அவதாரம் செய்கின்றார். இறைவனை நோக்கித் தன்னைத் திரும்பப் பெறுமாறு தவங் கிடக்கின்றார். இந்தக் காலத்திற்குள் பிருகு முனிவரும் ஹேம முனிவராகப் பிறக்கின்றார். தம்முடைய தவறுதலுக்குப் பரிகாரம் தேடுகின்றனர். தந்தை நிலையிலிருந்து பால கோமள வல்லியைப் பராமரிக்கின்றார்; அவரைச் சேர்த்துக் கொள்ளவும் இறைவனை வேண்டுகின்றார். எம்பெருமானும் இருவர் வேண்டுகோளுக்கும் இறங்கி திருவரங்கத்திலுள்ள பிரணவ விமானத்தினின்றும் வைதிக விமானத்தைப் பிரித்துக் கொண்டு, ஒர் இரதத்தில் குடந்தைக்கு ஒரு மகா சங்கராந்தியன்று எழுந்தருளுகின்றார். பால கோமளவல்லியைத் திருமணம் புரிந்து கொண்டு இருவர் மனங்களையும் நிறைவு செய்து விடுகின்றார். தானும் திருக்குடந்தையில் ஹேம முனிவரின் தவத்தை மெச்சும் வகையில் சார்ங்கம் ஏந்திச் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் தங்கி விடுகின்றார்; அரங்கநாதனைப் போலவே இவரும் கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். திருக்கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரைத் திருக்குளத்தின் கரையில் ஹேம முனிவருக்கு ஒரு சிறிய சந்நிதி உள்ளது. ஹேம முனிவரின் நினைவாக இத்திருக்குளம் ஹேம புஷ்கரிணி என்றும், இலக்குமி பொற்றாமரையில் பால கோமளவல்லியாக அவதரித்தமையால் பொற்றாமரைக்குளம் என்றும் திருநாமம் பெற்று வழங்குகின்றன. இத்தலத்து எம்பெருமானைப் பூதத்தார், பேயார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் என்ற ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பூதத் தாழ்வார், படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பனைமேல் சேர்ந்தாய் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு." (குடமூக்கு - கும்பகோணம்) என்று பாடுவார்; ஒரு புராண வரலாற்றையும் நினைவு படுத்துவார். ஒரு காலத்தில் நான்முகன் அமிர்தம், வேதங்கள், 6.இரண்.திரு.97